Kalki 2898AD : பிரபாஸ் உடன் சேர்ந்து ‘புஷ்பா 2’வை பதம் பார்க்க ரெடியாகும் கமல்.. கல்கி பட ரிலீஸ் தேதி மாற்றம்?

First Published Mar 22, 2024, 2:05 PM IST

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Kalki 2898AD, Pushpa2

பாகுபலி நாயகன் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் கல்கி. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்கி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

Kalki 2898 AD movie poster

இந்த நிலையில், அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கல்கி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி இப்படத்தை மே மாதத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Samyuktha Shan : 4 ஆண்டுகளாக வேறொருவருடன் உறவு... டைவர்ஸ் தர மறுக்கும் கணவன்! சிக்கலில் பிக்பாஸ் சம்யுக்தா

Prabhas Kalki 2898 AD

கல்கி படத்தின் இந்த திடீர் மாற்றத்தால், புஷ்பா 2 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. புஷ்பா 2 படத்தையும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்போது கல்கி படமும் அன்றைய தினமே ரிலீஸ் செய்யப்படும் முடிவில் உள்ளதால், புஷ்பா 2 படம் அதிலிருந்து பின்வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இரண்டுமே பான் இந்தியா படங்கள் என்பதால் பிசினஸை கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆக முடியும்.

Prabhas, Allu Arjun

புஷ்பா 2 படத்தில் அலு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்ப்டத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் பகத் பாசில். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... Nayanthara : இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நயன்தாரா அதை மறக்கவே இல்ல.. பிரபல நடிகை ஓபன் டாக்..

click me!