Horoscope: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...ரிஷபம் ராசிகளுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும்...வாழ்வில் வளம் கூடும்..

First Published Jun 15, 2022, 5:05 AM IST

Horoscope Today- Indriya Rasipalan june 15 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்களின் மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும், குறிப்பிட்ட சிலருக்கு ஆபத்தாக இருக்கும். அப்படியாக, இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். பேசக்கூடிய வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். இந்த நேரத்தில் அவர்களது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், கௌரவம் அதிகரிக்கும்

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். விரும்பியதை அடைய கூடிய நாள். மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பாராத திட்டம் நிறைவேறும். இந்த நேரத்தில் சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். அதே நேரத்தில், சொத்து அல்லது நிலம் போன்றவற்றால் லாபம் கிடைக்கும். 
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்: 

கடக ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் பொறுமையாக இருக்க வேண்டும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஆனால் அதை சமாளிக்க மனதில் தைரியம் வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதையும், யோசித்து நிதானமாக முடிவெடுங்கள். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அமையும். பண பரிமாற்றத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையை கவனத்தோடு செய்தால் மட்டும் போதும். இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். நீங்கள் பேசக்கூடிய பேச்சில் தெளிவு இருக்கும். உங்களுடைய முழு ஆற்றலும் வெளிப்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபவடுவீர்கள். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. தேவையற்ற குழப்பங்கள் மனதில் இருக்கும். மனதை ஒரு நிலைப்படுத்தி ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி கிடைக்காது. நீண்ட போராட்டத்திற்குப் பின்பு வெற்றி வாகை சூடுவீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதி அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். துணிச்சலோடு சேர்ந்து கொஞ்சம் கவனமாகவும் செயல்பட வேண்டும். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் இன்று ஈடுபடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். நீங்கள் நல்லதே சொன்னாலும் அது அடுத்தவர்களுக்கு கெட்டதாக தான் தெரியும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. சொத்து வாங்கவும் செல்வம் பெருகவும் தற்போது யோகம் உள்ளது.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் குடும்ப சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம்.

 மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த மூன்று ராசிகளுக்கு கஜகேசரி யோகம் உறுதி...

click me!