Horoscope Today: சிம்மம், மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று பொற்காலம் துவக்கம்...வாழ்வில் வெற்றி உறுதி...

First Published May 24, 2022, 7:38 AM IST

Horoscope Today: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி,  துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பொன்னான நாளாக அமையும். சில ராசிக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி  தெரிந்து கொள்வோம்.

Aries Zodiac -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், குடும்பம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் சமநிலையைப் பேணுவது மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். இந்த நேரத்தில் பொருளாதாரம்  மேம்படும். மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். எதிர்மறையான செயல்பாடு உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள். இந்த நேரத்தில், உங்கள் அன்றாட வேலைகளை சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று வேலையில் சிறப்பான வெற்றி இருக்காது. நீண்ட நாளாக பணியிடத்தில் இருந்து வந்த சர்ச்சைகள் நீங்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.  உடல் பலவீனம் ஏற்படலாம்.

Taurus Zodiac -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

 ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், பணியை முடிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி அதில் வெற்றி பெறுவீர்கள் மதம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் சிறிது நேரம் செலவிடுவது உங்களுக்கு மன அமைதியைத் தரும். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருங்கள். மாணவர்கள், இளைஞர்கள் படிப்பிலும், தொழிலிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும். கால நிலை மாற்றத்தால், ஒவ்வாமை மற்றும் வெப்பம் தொடர்பான உடல் நல கோளாறுகள் ஏற்படும். 

Gemini Zodiac -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள், இன்று சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் ஒரு பெரியவர் மற்றும் அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு மேம்படும். அர்த்தமில்லாமல் மற்றவர்களிடம் சிக்கலில் ஈடுபடாதீர்கள். அது உங்களை காயப்படுத்தும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி உறவில் இனிமை உண்டாகும். இன்று மன அழுத்தத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது.

Cancer Zodiac --Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

இன்று உங்களுக்கு அறிமுகமில்லாத நபருடன் சந்திப்பு ஏற்படும். ஆன்மீக வழிபாடு இருக்கும். கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் வெற்றி பிறக்கும். குழந்தைகளின் தொழில் தொடர்பான எந்த வேலையும் இல்லாதது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை செலவிடுங்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

Leo Zodiac -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்:

இந்த நேரத்தில், நல்ல செய்தியை பெறுவீர்கள். அதன் மூலம். உங்களுக்கு நம்பிக்கையும் புதிய ஆற்றலையும் தரும். வீட்டு மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையை பின்பற்றவும். சில சமயங்களில் அதீத தன்னம்பிக்கை உங்கள் வேலையை சீர்குலைக்கும். இந்த நேரத்தில், தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். தொழில் முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. நல்ல குடும்பம் மற்றும் வணிக உறவுகளில் பராமரிப்பு அவசியம்.

(Virgo) -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உங்கள் உறவுகளை வலுப்படுத்தும். நெருங்கிய உறவினரின் திருமண வாழ்வில் சிறிது பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ஆலோசனையால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மேலும், உங்கள் தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துங்கள். வர்த்தக மாற்ற திட்டங்களை விவாதிக்கலாம். கணவன்-மனைவி இடையே தவறான புரிதலால் மனக்கசப்பு ஏற்படலாம். உடல் சோர்வு ஏற்படலாம்.

Libra --Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:

உங்கள் முயற்ச்சிகள்  வேலையில் வெற்றியைத் தரும், நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்வது, சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும். இன்று, நீங்கள் உங்கள் வேலைப்பளு காரணமாக, வேலையில் அதிக கவனம் செலுத்த முடியாது. குடும்பப் பிரச்சனைகளை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தீர்த்துக்கொள்ள வேண்டும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

Scorpio --Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


விருச்சிகம்:

உங்கள் அமைதியான ஆளுமை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் நம்பிக்கை வளரலாம். சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள். தவறான நபரால் அவமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தொழில் நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு வரலாம். இன்று திருமணம் மகிழ்ச்சியாக நடக்கும். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கு சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி தேவை.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த நேரம் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. . ஒருவரின் தவறான புரிதல் கோபத்திற்கு வழி வகுக்கும். வீட்டுப் பெரியவர்கள், உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டலாம். தற்போதைய சூழ்நிலை காரணமாக, வணிக நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுவது அவசியம். தாம்பத்தியம் சந்தோஷமாக முடியும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

Capricorn -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


மகரம்:

இந்த நாள் வெற்றியாக அமையும். எந்த விஷயத்தையும், சாதுர்யத்தாலும் விவேகத்தாலும் முறியடிக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி மேம்படும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெறவும். அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். தொழிலில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். மூட்டு வலி பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

Aquarius -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்:

உங்கள் பொருளாதாரக் கொள்கைகளில் முழு நம்பிக்கையுடன் செயல்படுங்கள். இன்று நீங்கள் உங்களின் எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிடுங்கள். இந்த நேரத்தில் உங்கள் திறன்களை முழுமையாக பயன்படுத்துங்கள். எனவே, தவறான செயல்களில் சோம்பேறியாக இருந்து நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் கடன் வாங்க முடிவு செய்தால்,  அதை பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். அனுபவம் வாய்ந்த நபர்களுடன் உறவுகளை வலுப்படுத்துங்கள். கணவன்-மனைவி இடையே இனிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 

Pices Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்:

இன்று நிலம் வாங்குவது அல்லது விற்பது தொடர்பான வேலைகள் சிறப்பாக முடியும். உங்கள் நிதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்ற நேரம் இதுவாகும். நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் செயல்பாடுகளை புரியாமல் இருக்காதீர்கள். உங்கள் திட்டங்களில், மனைவியை ஈடுபடுத்துங்கள். வீட்டில் உள்ள எவருக்கும் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Weekly Horoscope: இந்த வார ராசிபலன்..23 மே முதல் 29 மே 2022 வரை, இந்த ராசிகள் அதிகம் கோபப்படுவதை தவிர்க்கவும்

click me!