இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை வாங்கிய பிரபல ஹாலிவுட் ஜோடி.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

First Published Apr 3, 2024, 10:21 AM IST

இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை பிரபல ஹாலிவுட் நட்சத்திர தம்பதி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பிரபல தொழிலதிபரும் ஆசியாவின் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் எது நடந்தாலும் அது தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. அந்த வகையில் தற்போது அம்பானி குடும்பத்தில் நடந்த விஷயம் தற்போது பேசு பொருளாகி உள்ளது. ஆம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பற்றிய செய்தி தான் அது.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ரிலையன்ஸின் ரீடெயில் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தற்போது 32 வயதாகும் இஷா கடந்த 2018-ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஆனந்த் பிராமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கிருஷ்ணா, அதியா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். 

ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சி இ ஓ- வாக இஷா அம்பானி நியமிக்கப்பட்ட பிறகு அவரின் வருமானம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு ஈவு தொகை லாபத்தை சேர்க்காமல் ரூ.35 லட்சம் வருமானம் வருகிறதாம். அப்படியானல் ஒரு ஆண்டுக்கு ரூ.4.2 கோடி வருமானம் வருகிறதாம்.. 

இஷா நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.8,361 லட்சம் கோடியாம்.. இந்தியாவின் முதல் 4 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.

Isha ambani

இந்த நிலையில் இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை பிரபல ஹாலிவுட் நட்சத்திர தம்பதி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீட்டில் தான் இஷா அதிக நாள் ஓய்வில் இருந்தாராம். இந்த வீட்டில் இருந்த போது தான் இஷாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. 

Isha ambani

இஷாவின் இந்த வீட்டை தான் தற்போது பிரபல ஹாவிவுட் நடிகர் ஃபென் அப்லெக்ஸ், அவரின் காதலி ஜெனிபர் லோபஸ் இருவரும் சேர்ந்து ரூ.500 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம் 38,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட வீட்டில் 12 படுக்கையறைகள் 24 பாத்ரூம்கள், ஜிம், ஸ்பா பேட்மிண்டன் கோர் என பல வசதிகள் உள்ளதாம். இந்த செய்தி தற்போது உலகளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. 

click me!