இவங்கெல்லாம் ரொம்ப Rugged ஆன ஆளுங்க... 2023-ல் ஹீரோக்களுக்கு தண்ணிகாட்டிய டெரர் வில்லன்களின் பட்டியல் இதோ

First Published Dec 26, 2023, 12:33 PM IST

2023-ம் ஆண்டு தங்களுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக்கவர்ந்த டாப் வில்லன் நடிகர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Best Villains of 2023

சினிமாவில் தற்போது ஒரு படம் ஹிட் ஆக வேண்டும் என்றால் அதில் ஹீரோவுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரமும் செம்ம ஸ்ட்ராங்க் ஆக இருக்க வேண்டும். அந்த வகையில், இந்த ஆண்டு ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தங்கள் வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்த வில்லன் நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பிரகாஷ் ராஜ்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் பிரகாஷ் ராஜ். தன்னுடைய வில்லன் மேனரிசத்தால் தளபதிக்கே இப்படத்தில் தண்ணி காட்டி இருந்தார் பிரகாஷ் ராஜ். அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மிஷ்கின்

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படம் மாவீரன். இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். பக்கா அரசியல்வாதியாக தன் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி விமர்சகர்களின் பாராட்டை பெற்றார் மிஷ்கின்.

பகத் பாசில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். ஜாதி வெறி பிடித்த கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்கி இருந்தார் பகத்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எஸ்.ஜே.சூர்யா

தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். அதுவும் அவர் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு அவர் வில்லனாக நடித்த மார்க் ஆண்டனி படம் வேறலெவல் ஹிட் அடித்தது. அப்படத்தில் தந்தை, மகன் என இரண்டிலுமே மாஸ் காட்டி இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

சரத்பாபு

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்களுள் போர்த் தொழில் படமும் ஒன்று. விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படத்தில் சரத்பாபு வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களை பயமுறுத்திய வில்லன் கதாபாத்திரமாக அவரது கேரக்டர் அமைந்திருந்ததால் இப்படம் வெற்றிபெற்றது.

விநாயகன்

ரஜினி போன்ற மாஸ் நடிகர் நடித்தால் அப்படத்தில் மற்ற நடிகர்களுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்காது. ஆனால் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு நிகரான ஸ்கிரீன் ஸ்பேஷ் உடன் தன்னுடைய எதார்த்த நடிப்பால் வில்லத்தனத்தில் புகுந்து விளையாடி இருந்தார் விநாயகன். ரஜினியே அவரின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாண்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் மழை பொழிந்த நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் எக்கச்சக்கமான வில்லன்கள் இருந்தாலும் சாண்டி மாஸ்டரின் நடிப்பு கவனம் பெற்றது. சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் இவர் வேறலெவலில் மிரட்டி இருந்தார். குறிப்பாக காஃபி ஷாப் சண்டைக்காட்சியில் சாக்லேட் காபி என கேட்டு சைக்கோ வில்லனாக மாஸ் காட்டி இருந்தார் சாண்டி.

இதையும் படியுங்கள்... அய்யய்யோ பாத்துட்டாங்களே... முகத்தை மூடிக்கொண்டு பெண் உடன் தலைதெறிக்க ஓடிய விஷால் - வைரலாகும் வீடியோ

click me!