Daniel Balaji: டேனியல் பாலாஜி மரணத்திற்கு இதுதான் காரணமா? இவருக்கும் நடிகர் முரளிக்கும் என்ன தொடர்பு?

First Published Mar 30, 2024, 8:07 AM IST

நடிகர்கள் கமல், விஜய், தனுஷ் உள்ளிட்டோர் படங்களில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Daniel Balaji

1975ம் ஆண்டு சென்னையில் உள்ள தரமணி திரைப்பட நிறுவனத்தில் பாலாஜி தனது படிப்பை முடித்தார். பின்னர் கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக தனது பயணத்தை தொடங்கினார். முதன் முதலில் சின்னத்திரையில் வெளியான ராதிகாவின் சித்தி தொடரில் அறிமுகமானவர். அதில் இவருடைய பெயர் டேனியல். அதற்கு பிறகு தான் இவருடைய பெயர் டேனியல் பாலாஜி என மாறியது.

Actor Daniel Balaji

பின்னர் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். காதல் கொண்டேன், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக அமுதன் சுகுமாரன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வட சென்னை, பைரவா, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

daniel balaji Heart Attack

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பதறிய குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மரணம் பொதுமக்கள், திரைத்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

Daniel Balaji death

நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். எப்படி என்றால் டேனியல் பாலாஜி அம்மாவும், மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும் உடன்பிறந்த சகோரிகள். டேனியல் பாலாஜி சென்னை ஆவடி போலீஸ் செக் போஸ்ட் அருகே ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் கோயிலையும் சொந்தமாக கட்டி இருக்கிறார். வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் அதிகம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

click me!