Ilayaraja Photo: மொரீஷியஸ் தீவில்.. கடற்கரையில் அமர்ந்து சில் வாங்கும் இளையராஜா..! வைரலாகும் புகைப்படம்!

First Published May 2, 2024, 8:36 PM IST

இசையமைப்பாளர் இளையராஜா கோடையை கழிப்பதற்கு மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனம், தன்னுடைய அனுமதி இன்றி... ரஜினிகாந்தின் கூலி பட டைட்டில் டீசரில், 'வா வா பக்கம் வா' பாடலை பயன்படுத்தியுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளையராஜா ஹாய்யாக மொரீஷியஸில் சில் பண்ணும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

Music Director Ilayaraja

அன்னக்கிளி படத்தின் மூலம் 1976-ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே, தன்னுடைய இனிமையான பாடல்களால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இளையராஜா, தற்போது வரை 1000-திற்கும் மேற்பட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

கோலிவுட் ரசிகர்களால் இசை கடவுளாகவே பார்க்கப்படும் இளையராஜாவின் பாடல்கள் தான் பலருக்கு தற்போது வரை தாலாட்டாக இருந்து வருகிறது. இவரின் சாதனைகளும், இவருடைய இசை அர்ப்பணிப்பும் சொல்லில் அடங்காதவை. இசையில் பல சாதனைகள் செய்திருந்தாலும், பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும் தற்போது வரை அவரின் பழைய ஹார்மோனிய பெட்டியை வைத்து தான் இசை அமைத்து வருகிறார்.
 

Ilayaraja

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், என பல்வேறு மொழிபடங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, 5 முறை இந்திய அரசின் தேசிய விருது உட்பட, பத்ம பூஷன், பத்ம விபூஷண், கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு சொந்த காரர்.

சுடருக்கு தாலி கட்ட போன வேலு.. கடைசி நொடியில் ட்விஸ்ட் கொடுத்த எழில்? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

Ilayaraja

இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தும், எப்போதுமே ஒருவித இறுக்கமான மனநிலையுடன் காணப்படுபவர் இளையராஜா. தன்னுடைய உறவுகள் மற்றும் பிள்ளைகளுடன் கூட அதிகம் பழக மாட்டார். ஆனால் தற்போது இவரின் ஒட்டு மொத்த அன்பையும் பெற்றவர் என்றால் அது யுவனின் மகள் தான். சில வருடங்களுக்கு முன் தன்னுடைய பேத்திக்கு இளையராஜா இசையமைக்க கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

இசை கச்சேரிகள் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் இளையராஜா... கோடை காலத்தை கழிப்பதற்காக மொரீஷியஸ் தீவுக்கு சென்று... கடற்கரையில் சில் பண்ணும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Not Ajith First Choice: அஜித்துக்கு முன்பு 'தீனா' படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான்! யார் தெரியுமா?

click me!