Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்

First Published Jun 27, 2022, 12:21 PM IST

Dangerous honeymoon photoshoot: குரோஷியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு உலகின் மிக ஆபத்தான ரயிலில் ஏறி ஹனிமூன் போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dangerous honeymoon photoshoot

திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் ஆகும். இந்த நாட்களை இன்னும் வாழ்வில் சிறப்பான தருணமாக்க, இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படியாக, உலகின் எங்கோ ஒரு மூலையில் எதோ ஒரு வித்தியாசமான நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. 

Dangerous honeymoon photoshoot

சில நேரம் அந்த நிகழ்வுகளை நாம் வேடிக்கையாக கடந்து செல்வோம். சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். சில நேரம் பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். அப்படியான ஒரு நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. குரோஷியாவைச் சேர்ந்த புதுமண தம்பதியினர் கிரிஸ்டிஜன் இலிசிக் மற்றும் ஆண்ட்ரியா ஹனிமூனின் போது வித்தியாசமான புகைப்படங்கள் எடுக்க விரும்பினர். 

 மேலும் படிக்க...60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Dangerous honeymoon photoshoot

இதையடுத்து, வடமேற்கு ஆபிரிக்காவின் மவுரித்தேனியாவில் இருக்கும் உலகின் ஆபத்தான சரக்கு ரயிலில் தேனிலவு போட்டோஷூட் எடுத்து தங்கள் வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பானபுகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Dangerous honeymoon photoshoot

2 கிமீ நீளமுள்ள 200 பெட்டிகளுக்கு மேல் உள்ள ஆபத்தான அந்த ரயிலில் இரும்புத்தாது துகள்கள் நிரப்பப்பட்டுள்ளன. அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு சிறிய துறைமுகத்திற்கு, சஹாரா பாலைவனத்தின் (பகலில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை) வழியாக 700 கி.மீ தூரம் சுமார் 20 மணி நேரம் ஓடும் ரயிலில் திருமண உடையில் தம்பதியினர் இருவரும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

 மேலும் படிக்க...60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Dangerous honeymoon photoshoot

இந்த புகைப்படம் பார்த்த நெட்டிசன்கள், இந்த கடும் வெப்பத்தில் இந்த  சரக்கு ரயிலில் உள்ள மணலில் அமர்ந்து சென்றால் ? எப்படி இருக்கும். யம்மாடியோ..கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும். ஏன்பா உங்களுக்கு போட்டோ ஷூட் எடுக்க வேற இடமே இல்லையா..?  என்றும், இன்னும் சிலர் திருமணம் என்பது மங்களகரமான ஒன்றாகும். அதில் இவ்வளவு ரிஸ்க் தேவை தான..? என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

 மேலும் படிக்க...60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

click me!