அதிகாலை முதலே விருதுநகரில் வெளுத்து வாங்கிய கனமழை! 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.!

First Published Feb 1, 2024, 8:11 AM IST

தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அதிகாலை 3 மணி முதல் விருதுநகர் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. 

Meteorological Centre

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

Tamilnadu Rain

இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மற்ற மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

Virudhunagar Heavy Rain

இந்நிலையில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களான சுக்கிரவார்பட்டி, டி.கான்சாபுரம், விளாம்பட்டி, மாரனேரி, காக்கிவாடன்பட்டி, பள்ளபட்டி, ஆமத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் விடாமல் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. 

South District Rain

இதனிடையே தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

click me!