Health Tips : உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுகிறீர்களா..? ஜாக்கிரதை! சரியான நேரம் இதுவே..

First Published Apr 15, 2024, 8:00 AM IST

பழங்களை சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய சில விதிகள் உள்ளன. அவற்றை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நம் அனைவரும் தெரியும். இதனால்தான் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுவும் குறிப்பாக, சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும்.

ஆனால் பழங்களை சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய சில விதிகள் உள்ளன தெரியுமா? அது என்னவென்றால், நம்மில் பெரும்பாலோர் உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், இது தவறு. அப்போ பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்று யோசிக்கிறீர்களா..? அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நாம் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும் என்கின்றனர்  நிபுணர்கள். ஆனால், உணவிற்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால், பழத்தில் உள்ள அதிகப்படியான கலோரிகள் உணவோடு சேர்ந்து உடலுக்குள் சென்று, ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துமாம். 

எப்படியெனில், சாப்பிட்ட பிறகு செரிமானம் ஆவதற்கு முன்பு பழத்தை சாப்பிட்டால், செரிமான அமைப்புக்கு இரட்டை சுமையாக இருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றில் மட்டுமல்ல தோலிலும் இதன் தாக்கம் காணப்படும்.

எப்போது பழங்களை சாப்பிட வேண்டும்?: உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் பழங்களை சாப்பிடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை. அதுபோல், மாலை 4 மணி முதல் 7 மணி வரை பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

click me!