Ice Water : கோடையில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கீங்களா..? இந்த பிரச்சினைகள் வரும்..ஜாக்கிரதை!

First Published Apr 13, 2024, 12:48 PM IST

நீங்கள் கோடை வெப்பத்தை தணிக்க அடிக்கடி ஜில்வாட்டர் குடிக்கிறீர்கள் என்றால், அதனால் ஏற்படும் சில கடுமையான பிரச்சனைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
 

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வெயிலின் உக்கிரத்தால், கோடையில் சரும பாதிப்பு முதல் சிறுநீரக பிரச்சினைகள் வரை உடலில் ஏற்படும். எனவே, இந்த காலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். 

பொதுவாகவே, வெயிலில் வெளியே சென்று வந்த பிறகு நாம் முதலில் குடிப்பது ஃப்ரிட்ஜ் வாட்டர் தான். இதை பலர் பழக்கமாகியுள்ளனர். இப்படி குளிர்ந்த நீர் குடித்தால் இதமாக உணருகிறார்கள். மேலும் அது வெப்பத்தை தணிக்கும். ஆனால், இது சிறிது நேரம் மட்டுமே நிவாரணம் தரும். உங்களுக்கு தெரியுமா.. கோடையில் குளிர்ந்த நீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆம் அதுதான் உண்மை..

ஆனால் இது பலருக்கு தெரியாது. இதனால் உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி, இதயமும் சேதமடையும். எனவே, நீங்கள் கோடை வெப்பத்தை தணிக்க அடிக்கடி ஜில்வாட்டர் குடிக்கிறீர்கள் என்றால், அதனால் ஏற்படும் சில கடுமையான பிரச்சனைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இப்போது அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.

செரிமான பிரச்சனைகள்: கோடையில் ஜில்வாட்டர் குடித்தால், உங்கள் செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதுவும் நீங்கள் 
தொடர்ந்து குடித்து வந்தால் உணவு செரிமானம் ஆகாது. இது வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். ஜில்வாட்டர், உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாறாதது. இதனால் தான் வயிற்றில் உள்ள உணவு ஜீரணிக்க கடினமாகிறது. 

தலைவலி: கோடையில் ஜில்வாட்டர் அடிக்கடி குடிப்பதால் மூளை உறைந்து போகும். ஐஸ் வாட்டர் குடிப்பதும், ஐஸ்கிரீம் சாப்பிடுவதும் இந்த 
நிலையை ஏற்படுத்தும். உண்மையில், ஐஸ் வாட்டர் மூளையை பாதிக்கும் முதுகெலும்பில் உள்ள உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கும். இதனால்
தலைவலி மற்றும் சைனஸ்  பிரச்சனைகளை ஏற்படும்.

இதையும் படிங்க: Beauty Tips : அடிக்கும் வெயிலில் முகம் பளபளக்க 'இந்த' ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்..!!

எடை கூடும்: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் கோடையில் ஒருபோதும் ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். ஏனெனில், ஐஸ் வாட்டர் குடித்தால் உடலில் கொழுப்பு சேரும். இதனால் எடை கூடும். எனவே, கோடையில் குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க:  பிரபலங்கள் முதல் பணக்காரர்கள் வரை ஐஸ் குளியல் எடுப்பது ஏன் தெரியுமா? தெரிஞ்சா நீங்களும் ட்ரை பண்ணுவீங்க..!!

தொண்டை தொற்று: கோடையில் குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் தொண்டை வலி ஏற்படும். ஏனெனில், இது அதிகப்படியான சளியை உற்பத்தி செய்யும். மற்றும் அது நுரையீரலில் குவிகிறது. இதனால் அழற்சி தொற்று ஏற்படும். எனவே முடிந்தவரை கோடையில் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!