Health Tips : இளைஞர்களை குறி வைக்கும் ஆபத்தான 3 நோய்கள்.. கவனமாக இருங்கள்!

Published : Apr 08, 2024, 03:07 PM ISTUpdated : Apr 08, 2024, 03:22 PM IST

இன்றைய காலத்து இளைஞர்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அதிக கவனக்குறைவாக இருப்பதால், இந்த 3 ஆபத்தான நோய்கள் அவர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. அவை..

PREV
15
Health Tips : இளைஞர்களை குறி வைக்கும் ஆபத்தான 3 நோய்கள்.. கவனமாக இருங்கள்!

இன்றைய காலக்கட்டத்தில், ஆரோக்கியத்தில் அக்கறையின்மையால், பெரும்பாலான இளைஞர்கள் கடுமையான நோய்களுக்கு பலியாகின்றனர். அதுவும் இந்த பரபரப்பான உலகில், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகிவையே அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. 

 

25

இத்தகைய சூழ்நிலையில், 50 வயதுக்குட்பட்டவர்கள் இந்த 3 ஆபத்தான நோய்களுக்கு பலியாகின்றனர். சரியான நேரத்தில் கவனம் செலுத்தாவிட்டால், உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில் சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் அவற்றை சரிசெய்து விடலாம். சரி.. இப்போது வாங்க..அந்த மூன்று நோய்கள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
 

35

உடல் பருமன்: உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இன்று உலகில் பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். முறையற்ற வாழ்க்கை முறையே இதற்கு காரணம். இது, பல நோய்களுக்கு ஆரம்பம் என்றே சொல்லலாம். புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 1990 முதல் 2024 வரை உடல் பருமன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, அதைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுர்வேதத்தில் உடல் பருமனை கட்டுப்படுத்த, வாத, பித்த மற்றும் கபாவை கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்ற செயல்முறையை சரிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:  

 

45

இதய நோய்கள்: இன்றைய பல இளைஞர்கள் இருதயக் கோளாறு பிரச்சனையால் பலியாகி வருகின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் இந்த காரணத்தால் தான் ஏற்படுகின்றன. அதுவும் குறிப்பாக, இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் தவிர, இதய நோய்கள் இளைஞர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு மிகப்பெரிய காரணம் உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே ஆகும்.

இதையும் படிங்க:  Health Tips : உஷார்..! கோடை காலத்தில் 'இந்த' பானங்களை தவறுதலாக கூட குடிக்காதீர்கள்.. ஆரோக்கியத்திற்கு கேடு!

55

நீரிழிவு நோய்: உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நீரிழிவு நோய் எதிர்காலத்தில் ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாட்டில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிக கலோரி உணவு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை. இதைக் கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தில் பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இனிப்புப் பொருட்களைத் தவிர்ப்பது, தினசரி உடற்பயிற்சி, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, பருவத்திற்கு ஏற்ற உணவு, தியானம், யோகா ஆகியவை இதில் அடங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories