Sai Pallavi : பாலிவுட் போனதும்... நயன்தாராவுக்கு நிகரான சம்பளம் - நடிகை சாய் பல்லவிக்கு அடித்த ஜாக்பாட்..!

Published : Apr 08, 2024, 02:34 PM IST

நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ள ராமயணா படத்தில் அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
Sai Pallavi : பாலிவுட் போனதும்... நயன்தாராவுக்கு நிகரான சம்பளம் - நடிகை சாய் பல்லவிக்கு அடித்த ஜாக்பாட்..!

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன அவருக்கு அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்தார் சாய் பல்லவி. அவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியகா தண்டல் படத்தில் நடித்து வருகிறார்.

24

இதில் அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Prashanth : திருமணமான ஒன்றரை மாதத்தில் நடிகர் பிரசாந்த்தை கழட்டிவிட்டு பிரிந்து சென்ற மனைவி... காரணம் என்ன?

34

இதுதவிர இந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இப்படம் மூலம் அவர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். அப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பை பாலிவுட்டில் தட்டி தூக்கி இருக்கிறார் சாய் பல்லவி. ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் நடிகை சாய் பல்லவி.

44

இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். மேலும் ராவணனாக நடிகர் யாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்க உள்ளார்களாம். இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... தனுஷுடன் இனி சேர வாய்ப்பே இல்லை.! நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Read more Photos on
click me!

Recommended Stories