Hanuman Jeyanthi 2024 : இன்று அனுமன் ஜெயந்தி... இந்த 3 ராசிக்காரங்க அளப்பரிய பலன்களைப் பெறுவார்கள்..!

First Published Apr 23, 2024, 10:06 AM IST

இன்று அனுமன் ஜெயந்தி. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த நன்நாளில், சில ராசிக்காரர்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். அந்த அதிஷ்ட ராசிகள் யார் யார் என்பதை குறித்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி இன்று (ஏப்.23) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனுமனை வழிபட்டால் வாழ்வில் ஐஸ்வர்யத்தை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. எதிர்மறை சக்திகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, இந்த நன்நாளில 3 ராசிக்காரர்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். அப்படியானால் அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி நாள் மிகவும் பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த நாளில் அவர்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். மேலும், இந்நாளில் புதிய வேலைகளைத் தொடங்குவது மிகவும் மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க:  Hanuman Jayanti 2024 : நாளை அனுமன் ஜெயந்தி.. சுப நேரம் மற்றும் வழிபாட்டு முறை இதோ..!

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மிகவும் நல்ல நாளாகவும் கருதப்படுகிறது. அவர்களின் ஆளும் கிரகம் செவ்வாய் மற்றும் அனுமன் இந்த கிரகத்திற்கும் நாளுக்கும் தொடர்புள்ளதால் இந்நாள், இந்த ராசிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்களின் வருமானம் பகலில் இரட்டிப்பாகவும், இரவில் நான்கு மடங்காகவும் உயரும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களது புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசையும் நிறைவேறும்.

இதையும் படிங்க:  Hanuman Jayanthi 2024: இதனால் தான் அனுமனுக்கு வெற்றிலையும், வெண்ணையும் பிடிக்குமாம்.. இதை செய்ய மறக்காதீங்க..

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி சிறப்பான நாளாக இருக்கும். அனுமனின் அருளால் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்பது நம்பிக்கை. புதிய வேலைக்கான தேடல் முடியும். மேலும் வெளிநாடு செல்லும் கனவும் நிறைவேறும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!