ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 8a... விலை எவ்வளவு தெரியுமா?

First Published May 8, 2024, 11:25 AM IST

கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை அசத்தல் ஆஃபருடன் இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Google Pixel 8a

கூகுள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிக்சல் சீரிஸ் மாடலான கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக லாஞ்ச் ஈவண்ட்டில் தான் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் போன்களை அறிமுகம் செய்யும். ஆனால் இந்த ஆண்டு கூகுள் லாஞ்ச் ஈவண்ட் வருகிற மே 14-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Google Pixel 8a launched

கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனின் முன்பதிவு தற்போது பிளிப்கார்ட்டில் தொடங்கி இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கூகுள் பிக்சல் 8a போனை முன்பதிவு செய்பவர்கள் பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் இயர்போன்களை ரூ.999க்கு வாங்கிக் கொள்ள முடியும் என்கிற அசத்தல் ஆஃபர் வழங்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனை வருகிற மே 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... வேற மாறி ஐபாட்.. புது கீபோர்டு.. ஆப்பிள் பென்சில் ப்ரோ.. லெட் லூஸ் நிகழ்வில் கெத்து காட்டிய ஆப்பிள்..

Google Pixel 8a Price

இரண்டு வேரியண்டுகளாக கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி அதன் 128 ஜிபி வெர்ஷன் ரூ.52 ஆயிரத்து 999க்கும், 256 ஜிபி வேரியண்ட் ரூ.59 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிமுக சலுகையாக எஸ்.பி.ஐ வங்கி கார்டுக்கு ரூ.4 ஆயிரம் தள்ளுபடியோடு, பழைய போன்களை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.9 ஆயிரம் வரை பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர்களை பயன்படுத்து ரூ.52,999 மதிப்புள்ள கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை ரூ.39,999க்கு பெற முடியும்.

6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED Actua டிஸ்பிளே உடன் வரும் கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போன், 4492 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. கூகுளின் Tensor G3 சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் Aloe, Bay, Obsidian, மற்றும் Porcelain ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Google Pixel 8a Specs

கேமராவை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா வசதியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸும், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸும் இடம்பெற்று உள்ளது. இதுதவிர 13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் உள்ளது.

ஏஐ வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது. குறிப்பாக ஒரு போட்டோ எடுக்கும்போது அதில் தேவையில்லாத பொருட்கள் ஏதேனும் இருப்பின் அதை ஒரே கிளிக்கில் நீக்கிவிட முடியும். அதேபோல் வீடியோவில் தேவையில்லாத ஒலி ஏதேனும் இருந்தால் அதை ஏஐ உதவியுடன் நீக்கிக் கொள்ளும் வசதியும் இந்த ஸ்மார்ட் போனில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... 20 ஆயிரம் ரூபாய் விலை குறைப்பு.. ஆப்பிள் ஐபோன் 15 வாங்க அருமையான வாய்ப்பு.. எப்படி வாங்குவது?

click me!