Goat First Single: தளபதி விஜய்யின் 'GOAT' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

First Published Apr 13, 2024, 4:26 PM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தற்போது AGS நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 

GOAT movie

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தை தொடர்ந்து தன்னுடைய 68 ஆவது படமாக உருவாகும், 'GOAT' படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக வெங்கட் பிரபு - விஜய் காம்போ இப்படத்தில் இணைத்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 

மேலும் இந்த படத்தில், நடிகர் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, ஜெயராம், லைலா, அஜ்மல், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான இசையமைப்பாளரும், சகோதரருமான, யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Meena: எனக்கு மீனா தான் வேண்டும்! அடம்பிடித்த 63 வயது நடிகரை அசிங்கப்படுத்தினாரா கண்ணழகி? கொதிக்கும் ரசிகர்கள்

Director Venkat prabhu

'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' என பேரிடப்பட்டுள்ள இந்த படம் குறித்த அப்டேட் அவ்வபோது வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. கிட்டதட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், விரைவில் முடிவடையும் என தெரிகிறது.
 

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கள் பாடலுக்கு ரெடியா? என கேள்வி எழுப்பி எ ஜி எஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'GOAT' படத்தை செப்டம்பர் மாதம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நான் விலகவில்லை! இப்படி ஆகிடுச்சு.. ரசிகர்களை பதற வைத்த ரேஷ்மா முரளிதரன்!
 

click me!