கோலி, சூர்யகுமார் யாதவ் கிடையாது – T20 WCல் ஜொலிக்க போவது ஜெய்ஸ்வால், ஷிவம் துபே தான் – ரவி சாஸ்திரி!

First Published May 8, 2024, 11:24 AM IST

டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் கிடையாது என்றும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே தான் என்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

T20 World Cup 2024 India Squad

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் இந்த உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

T20 World Cup 2024 India T20 Jersey

இதில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நேபாள், நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, வங்கதேசம் என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

Virat Kohli

இந்த 20 அணிகளும் 5 குரூப்களாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

Rohit Sharma

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

Team India

இந்த நிலையில், இந்த தொடரில் ஜொலிக்க போகும் அந்த 2 வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பை இந்தியா வெல்ல யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர்.

T20 World Cup Team India

இதில் இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள். இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால். இங்கிலாந்துக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஓபனிங்கில் இறங்கி விளையாடக் கூடியவர். பயம் கிடையாது. இளம் வீரர் என்று குறிப்பிட்டார். இதே போன்று மிடில் ஆர்டரிலும் ஒருவர் இருக்கிறார். அவர் தான், ஷிவம் துபே. ஸ்பின்னர்களை எதிர்கொண்டு சிக்ஸர்கள் விளாசக் கூடியவர். அவரிடம் ஸ்பின்னர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Shivam Dube, Yashasvi Jaiswal

ஆனால், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை விட ஜெய்ஸ்வால் மற்றும் துபே தான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!