Meena Birthday: மீனாவின் 47-ஆவது பிறந்தநாளை களைகட்ட வைத்த பிரபலங்கள்! வைரலாகும் பர்த்டே செலபிரேஷன் போட்டோஸ்!

Published : Sep 16, 2023, 11:25 AM ISTUpdated : Sep 16, 2023, 12:13 PM IST

நடிகை மீனாவின் 47-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு பிரபலங்கள் சிலர் இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
18
Meena Birthday: மீனாவின் 47-ஆவது பிறந்தநாளை களைகட்ட வைத்த பிரபலங்கள்! வைரலாகும் பர்த்டே செலபிரேஷன் போட்டோஸ்!
Meena Acting Carrier:

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக, தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கி... பின்னர் தன்னுடைய 15 வயதிலேயே, ஹீரோயினாக நடிக்க துவங்கியவர் மீனா.

28
Meena Debut Movie:

இவர் கடந்த 1991ம் ஆண்டு,  ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'ராசாவின் மனசிலே' என்கிற படத்தில் தான் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரின் கதவை தட்ட துவங்கியது.

 

38
Leading Actress Meena:

மிக குறுகிய வருடங்களிலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்த மீனா, கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்கள் பலருக்கு ஜோடியாக நடித்தார்.

55 வயசு.. பாட்டியானாலும் வனிதா விஜயகுமார் அக்கா கவிதாவின் பியூட்டி குறையல! வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்!

48
Meena Acting with Vijay And Ajith

மேலும் விஜய்யுடன், 'ஷாஜகான்' படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு மீனா ஆட்டம் போட்டுள்ளார். அதே போல், அஜித்துடன் 'வில்லன்' படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போனில் டைம் டிராவல் செய்த 'மார்க் ஆண்டனி' பாக்ஸ் ஆபிசில் ஜெயித்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ..!

58
Meena Plus

இவர் நடித்த படங்களில், அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எப்படி பட்ட கேரக்டருக்கும் கனகச்சிதமாக பொருந்தினார் மீனா. இதுவே இவரின் மிகப்பெரிய பிளஸ்சாகவும் பார்க்கப்பட்டது.

68
Meena Re-entry:

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கணவர் மறைவுக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த மீனா, மீண்டும்... ஒரு மலையாள நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியில் டாப் கியரில் போகும் வாணி போஜன்! சல்லடை போன்ற டாப்பில்... உள்ளாடை தெரிய கிளாமர்! ஹாட் போட்டோஸ்!

78
Meena Avoid Celebrations

கணவர் இருந்தவரை ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பிறந்தநாளுக்கு பிரபலங்களுக்கு, பார்ட்டி வைத்து கொண்டாடிய மீனா, கணவர் இறப்புக்கு பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

88
Meena 47th Birthday:

இந்நிலையில் இன்று தன்னுடைய 47-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மீனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சினேகா, அனிதா விஜயகுமார், ரேணுகா பிரவீன், போன்ற பல பிரபலங்கள் ஒன்று கூடி மீனாவுக்கு இரவு 12 மணிக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது அனிதா விஜயகுமார், உள்ளிட்ட சிலர் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் வெளியிட வைரலாகி வருகிறது. 

Atlee Net Worth: 36 வயசு... இயக்கியது 5 படம் தான்!! அட்லீயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

Read more Photos on
click me!

Recommended Stories