Vela Ramamoorthy: என் பொண்டாட்டி எனக்கு மகள் முறை வரும்.. திருமணம் பற்றி எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி ஓபன்டாக்

First Published Apr 7, 2024, 11:37 AM IST

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தி, தனக்கு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறி இருக்கிறார்.

Vela ramamoorthy

புகழ்பெற்ற எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, குற்றப் பரம்பரை, குறுதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதி இருக்கிறார். இவர் எழுதிய குற்றப்பரம்பரை என்கிற நாவலை படமாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. எழுத்தாளராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் நடிகராகவும் கலக்கி வருகிறார் வேல ராமமூர்த்தி, கிராமத்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் இவர், மதயானை கூட்டம் படம் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

Ethirneechal Vela ramamoorthy

அப்படத்தில் இவரது வேடத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து கொம்பன், சேதுபதி, கிடாரி, அறம் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் வேல ராமமூர்த்தி, கடந்த ஆண்டு முதல் சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்துள்ளார் வேல ராமமூர்த்தி.

இதையும் படியுங்கள்... Gopinath : 13 கிலோ துணி மூட்டையோடு தெரு தெருவா திரிஞ்சேன்... நீயா நானாவில் கோபிநாத்தை கண்கலங்க வைத்த தருணம்

Marimuthu, vela ramamoorthy

அந்த சீரியலில் ஆதி குணசேகரனாக பட்டைய கிளப்பி வந்த மாரிமுத்து, கடந்தாண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். சீரியலிலும் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வேல ராமமூர்த்திக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிப்பதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

Vela Ramamoorthy Marriage

இந்த நிலையில், சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த வேல ராமமூர்த்தி, தன்னுடைய திருமணம் பற்றி பேசி இருந்தார். அதில் அவரிடம் நீங்கள் காதல் திருமணம் செய்து கொண்டீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது : “இல்லை, சொந்தத்துல தான் திருமணம் பண்ணேன். சொந்த மதினி மகளை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க இதுல அக்கா மகளை கல்யாணம் பண்ண மாட்டாங்க. அவங்க எனக்கு மகள் முறை வரும். எங்க ஆளுங்கள்ல மட்டும் அந்த மாதிரி கட்டுவோம்” என கூறி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஒரே டியூனில் 2 பாட்டு போட்ட விஜய் ஆண்டனி... ஒன்னு பிளாப்; இன்னொன்னு மாஸ் ஹிட் - அது என்ன பாட்டு தெரியுமா?

click me!