இளையராஜாவின் 'தென்றல் வந்து தீண்டும்..' பாடல் உருவான கதை!

First Published | Aug 17, 2024, 10:35 AM IST

'அவதாரம்' படத்தில் இடம்பெற்ற, தென்றல் வந்து தீண்டும் போது பாடல் எப்படி உருவானது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Avatharam Movie

ஒரு சில படங்களில் ஹீரோவாகவும், ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நாசர். இவர் முதல் முதலில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் 'அவதாரம்'. 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், நாசர் ஹீரோவாக நடிக்க... அவருக்கு ஜோடியாக ரேவதி கண் தெரியாத பெண் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பாலாசிங். ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ். வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதாகிருஷ்ணன், ஜூனியர் பாலையா, தியாகு, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
 

Ilayaraja Song

இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு லாபத்தை பெற்று தரவில்லை என்றாலும், இளையராஜா - ஜானகி குரலில் 'அவதாரம்' படத்தில் இடம்பெற்ற 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷத்தில் தான் இருந்தாராம்.

எனக்கு சுயமரியாதை இருக்கிறது! அம்பானி வீட்டு திருமணம... ரகசியத்தை உடைத்த அனுராக் காஷ்யாப் மகள்!
 

Tap to resize

Movie Flop But Song hit

அதாவது, நாசர் இயக்கி ஹீரோவாக நடித்த இந்த படம், அந்த காலகட்டத்தில் சுமார் 46 லட்சம் நஷ்டம் அடைந்ததாகவுடன், அந்த சமயத்தில் இது மிகப்பெரிய தொகை என்றாலும் கூட இப்படத்தில் இடம்பெற்ற இந்த ஒரே ஒரு பாடல் மொழிகள் கடந்து ரசிக்க பட்டதால் தயாரிப்பாளர் இதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றியாக நினைத்துள்ளார்.

Thendral Vandhu Theendum podhu Song

ஆனால் உண்மையில் இந்த பாடல், நாசருக்கு பிடிக்காமல் தான் இப்படத்தில் இடம்பெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருநாள் திடீர் என இளையராஜாவை சந்தித்த நாசர், "தான் ஒரு படம் இயக்கப் போவதாகவும், அதற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என கூறி உள்ளார். அப்போது இளையராஜா அவரை ஆச்சரியமாக பார்த்ததோடு, முதலில் படத்தை எடுத்து முடித்துவிட்டு வா... நான் இசையமைத்து தருகிறேன் என கூறியுள்ளார். பின்னர் படத்தை எடுத்து முடித்துவிட்டு அதை இளையராஜாவிடம் காட்டியுள்ளார் நாசர். அப்போது எதுவும் பேசாத இளையராஜா, நாளை காலை ஸ்டூடியோவுக்கு வந்துவிடு என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

பாரதி ராஜாவின் முதல் பட ஹீரோயின் ஜெயலலிதாவா? டேக் ஆஃப் ஆகாமல் போன ஹிட் படம்!
 

Ilayaraja

இளையராஜா சொன்ன நேரத்தில் அவருடைய ஸ்டூடியோவில் சரண்டர் ஆனார் நாசர். இளையராஜாவும் நாசர் முன்பு வந்து அமர்ந்து தன்னுடைய ஹார்மோனிய பொட்டியை  முன்னாள் வைத்துக்கொண்டு  ஒரு பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டே இருந்துள்ளார். பின்னர் இந்த படத்திற்கான பாடலை எழுதி விட்டேன் என கூறி, தென்றல் வந்து தீண்டும் போது என்கிற பாடலை மெட்டமைத்து பாடி காட்டியுள்ளார். அப்போது இந்த பாடல் நாசருக்கு பிடிக்கவில்லையாம்.

Nasar Revel Truth

ஆரம்பத்தில் கொஞ்சம் வேகமாக இருக்க வேண்டும் என நாசர் கூற, பின்னர் சில திருத்தங்கள் செய்து இந்த பாடலை ஜான்பூரி ராகத்தில் மெட்டமைத்து அமைத்துக், அதில் பாடியும் கொடுத்துள்ளார். அரை மனதுடன் இந்த பாடல் 'அவதாரம்' படத்தில் இடம்பெற நாசர் ஒப்புக்கொண்டாலும், இந்த ஒற்றை பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பின்னர்... அவரின் தவறை நினைத்து வருத்தப்பட வைத்து விட்டது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒன்றில் நாசர் கூறி, அவர் இசையின் ராஜா என புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!

Latest Videos

click me!