பாரதி ராஜாவின் முதல் பட ஹீரோயின் ஜெயலலிதாவா? டேக் ஆஃப் ஆகாமல் போன ஹிட் படம்!
இயக்குனர் பாரதிராஜா 16 வயதினிலே படத்தை இயக்குவதற்கு முன்னர். ஜெயலலிதா - முத்துராமன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். அந்த படம் குறித்து, இதுவரை யாரும் அறிந்திடாத சில தகவல்கள் இதோ.
Bharathi Raja
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பாரதிராஜா. இவருடைய படங்களில் 'என் இனிய தமிழ் மக்களே' என்று இவர் சொல்லும் வசனத்திற்க்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. திரையரங்கில் கைத்தட்டல்களும் அள்ளும். அப்படி பட்ட இவரின் ஹிட் படத்தை ஜெயலலிதா ஏன் மிஸ் செய்தார் தெரியுமா?
Bharathi Raja Debut 16 Vayathinilea
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் பிறந்த பாரதிராஜாவின் சொந்த பெயர் சின்னசாமி. சினிமாவுக்கு வந்த பின்னரே இவர் தன்னுடைய பெயரை பாரதிராஜா என மாற்றிக் கொண்டார். இவர் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்த படத்தில் ஸ்ரீதேவி, கமலஹாசன், ரஜினிகாந்த், என மூன்று சூப்பர் ஸ்டார்களை வைத்து இயக்கி, மாஸ் ஹிட் கொடுத்தார்.
3 Super stars acting in 16 Vayathinilea
இவரது முதல் படமான 16 வயதிலேயே திரைப்படம் மூலம், கிராமத்து திரைப்படம் என்ற புதிய வகையை உருவாக்கினார். அப்போது நடைமுறையில் இருந்த காட்சிகளை உடைத்து, இவருடைய புதிய அணுகுமுறை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புது மைல்கள்ளாக பார்க்கப்பட்டது.
Radhika Sarathkumar
16 வயதினிலே படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படம் 'கிழக்கே போகும் ரயில்' இந்த படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகாவை கதாநாயகியாக மாற்றினார். மேலும் ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை பாரதிராஜாவையே சேரும்.
'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு 2 விருதுகள்; சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன்!
Muthal Mariyathai
மேலும் இவர் இயக்கிய நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை, போன்ற படங்களில் பாச பிணைப்பால் ரசிகர்கள் நெஞ்சங்களை உருக வைத்தார்.
Bharathi Raja Awards
பத்மஸ்ரீ விருது, ஆறு தேசிய விருது, 4 ஃபிலிம் பேர் விருது, 7 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு நந்தி விருது மற்றும் ஏராளமான திரைப்படம் விருதுகளை வென்றுள்ள பாரதிராஜா... இயக்க இருந்த முதல் படத்தில் ஜெயலலிதா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆன நிலையில் பின்னர் அதில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!
Jayalalithaa Reject Movie
பாரதி ராஜா '16 வயதினிலே' படத்தை இயக்குவதற்கு முன்னர் கதாசிரியர் செல்வராஜின் கதையில், 'சொந்த வீடு' என்ற படத்தைத்தான் முதல் படமாக்க முதலில் திட்டமிட்டிருந்தாராம். முத்துராமன் கதாநாயகனாக நடிக்க, ஜெயலலிதா கதாநாயகியாக நடிக்க இருந்தார். இந்த படத்திற்காக ஜெயலிதாவிடம் கதையைச் சொல்லி, 28 நாட்கள் கால்ஷீட்டும் வாங்கிவிட்டார் பாரதிராஜா. ஆனால், படப்பிடிப்பு கிளம்பும் சமயத்தில் ஜெயலலிதாவிடம், பிரபல இயக்குனர் ஒருவர் 'அவனுக்கு கிளாப் கூட அடிக்கத் தெரியாது. சின்னப் பையன் அவன். சரியா படமெடுக்கத் தெரியுமானு கூட தெரியல' என்று வாயில் வந்ததை பேசியுள்ளார்.
Sontha Veedu Movie
இதையடுத்து தன்னுடைய முடிவை மாற்றி கொண்ட ஜெயலலிதாவால் 'சொந்த வீடு' டேக் ஆஃப் ஆகாமல் போனது. அதற்குப் பின்தான் '16 வயதினிலே' படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனர் இமையமாக தனக்கான இடத்தைப் பிடித்தார் பாரதிராஜா.
யாஷிகா பாதி.. ஹன்சிகா மீதி; ஷாரிக்கின் காதலி மரியாவின் கியூட் வெட்டிங் போட்டோஸ்!
Pudhumai Pen
பின்னாளில் ஜெயலலிதா நடிக்கவிருந்த 'சொந்த வீடு' திரைப்படம்தான் ஏவிஎம். தயாரிப்பில் ரேவதி நடிப்பில் 'புதுமைப்பெண்' ஆக மலர்ந்தது. அந்த படம் ரேவதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதாவிற்கு, பாரதிராஜா இயக்கியதில் மிகப்பிடித்த படம் முதல்மரியாதை. முதல் மரியாதை படத்தை 15 முறை பார்த்ததாக ஜெயலலிதா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.