எனக்கு சுயமரியாதை இருக்கிறது! அம்பானி வீட்டு திருமணம... ரகசியத்தை உடைத்த அனுராக் காஷ்யாப் மகள்!
பல கோடிகள் செலவு செய்து நடத்தப்பட்ட அம்பானி வீட்டு திருமணத்தில், ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்கிற கேள்விக்கு... வெளிப்படையாக பேசி அதிர வைத்துள்ளார் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யாப் மகள் ஆலியா.
Anant - Radhika Pre Wedding
ஆனந்த் - ராதிகா திருமணம் நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே... ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்துடன் இவர்களின் திருமண நிகழ்ச்சி துவங்கியது. காசை தண்ணீராக செலவு செய்து தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை ஊரே வியக்கும் அளவிற்கு நடத்தி வைத்தனர் முகேஷ் அம்பானி.
Anant Ambani Wedding Expense
5000 கோடி செலவழிக்கப்பட்ட இவர்களின் திருமணம், ஜூலை 12-ஆம் தேதி... மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மையத்தில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட சல்மான் கான், அமீர் கான், ஷாருகான், என பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி நோம்பை தவறாமல் எடுக்கும் ப்ரீத்தா ஹரி! இந்த வருட போட்டோஸ் வைரல்!
Modi Also Participate This Marriage
அதே போல் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சர்வதேச பிரபலங்கள், தொழிலதிபர்கள், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், ஜஸ்டின் பைபர், ரிஹானா, போன்ற சர்வதேச பிரபலங்கள் ஆனந்த் - ராதிகா திருமணத்தை ஆட்டம் பாட்டத்தோடு களைகட்ட வைத்தனர். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சில பிரபலங்களுக்கு முகேஷ் அம்பானி ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கிய நிலையில் அதன் புகைப்படங்களும் வைரலானது.
Ambani Distribute Money
அதே போல் சிலர், அம்பானி திருமணத்தில் கலந்து கொள்வதற்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி இருந்தனர். ஏற்கனவே இது ஒரு விவாதமாக மாறிய நிலையில், பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப்பின் மகளும் இதோ போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
Aaliyah about This Wedding:
அம்பானி வீட்டுத் திருமணம், குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திய ஆலியா காஷ்யப், இது ஒரு திருமணமே கிடையாது. அது சர்க்கஸ் நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது. என்னையும் அவர்களின் திருமண விழாவிற்கு அழைத்தார்கள். விளம்பரம் செய்வதற்காகத்தான் அழைக்கிறார்கள் என்று தெரியும். அதனால் நான் பங்கேற்க மறுத்துவிட்டேன். பணத்திற்காக ஒரு திருமண நிகழ்விற்குச் செல்ல விருப்பம் இல்லை. எனக்குச் சுயமரியாதை இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களிடம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து என்ன செய்ய முடியும்? என பேசியுள்ளார்.