RRR Movie OTT: ஓடிடியில் மிரட்ட வரும் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படம்... ரிலீஸ் தேதி கேட்டு குஷியான ரசிகர்கள்...

First Published May 15, 2022, 10:17 AM IST

RRR Movie OTT Release Date in zee5: ராஜமௌலி இயக்கத்தில், 55 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும்  'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது.  

RRR

ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த மார்ச் 25 ம் தேதி பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்  'ஆர் ஆர் ஆர்'. 

RRR

தெலுங்கின் இரு பெரும் நடிகர்களான ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

RRR

1920 களில் ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை  மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். 

RRR

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.  கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

RRR

படத்தின் பிரமாண்டம், கதை, பாடல்கள் என ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்க, படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், வசூலில் தூள் கிளப்பி 1, 200 கோடியை கடந்து சாதனை படைத்து வருகிறது.

RRR

அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ வெளியாகி சரியாக 55 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகிய இயங்கு தளங்களை பெற்றுள்ளது.  

RRR

மேலும். நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இப்படத்தின் ஹிந்தி வெர்ஷனும், ஜீ5 தளத்தில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் வெர்ஷன்களும் வெளியாகவுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 2022 மே 20 ஆம் தேதி வெளியாகிறது. 

RRR

இதனை அதிகாரபூர்வமாக ஜீ5 தளம் அறிவித்துள்ளது. மேலும், மே 20 நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் என்பதும் ரசிகர்களுக்கு இரண்டு ட்ரீட் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வரும் ஜூன்-3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் நெட்ப்ளிக்ஸ் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

 மேலும் படிக்க ....Atlee: அட்லீ கேட்ட மிக பெரிய சம்பளம்...வாயடைத்து போன பிரபல ஹீரோ...அட..பொசுக்குனு இத்தனை கோடியா கேட்பது..?

click me!