'அந்த’ நடிகை உடன் சிவகார்த்திகேயன் காதலா? எஸ்.கே பற்றி நடிகர் தனுஷ் சொன்ன கிசுகிசு வைரலாகிறது

First Published Oct 29, 2023, 10:48 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனுஷ் பழைய பேட்டி ஒன்றி சொன்ன கிசுகிசு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

sivakarthikeyan

சின்னத்திரையில் தொகுப்பாளராக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ் தான். அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த 3 படம் மூலம் காமெடியனாக அறிமுகமானார் சிவா. இதையடுத்து தனுஷ் மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும், அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எதிர்நீச்சல் தான். அப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார்.

sivakarthikeyan

வில்லங்கத்தில் சிக்காத நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயன், அண்மையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார். அதன்படி இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறி பேட்டி அளித்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், டி.இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனக் கூற, சர்ச்சைக்குரிய விமர்சகரான பிஸ்மி, சிவகார்த்திகேயன் இமானுக்கு செய்த துரோகம் என்ன என்பது தெரியும் என்றும் அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் பேசியது இந்த விஷயத்தை பூதாகரமாக்கியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

sivakarthikeyan

இதனால் சிவகார்த்திகேயன் பற்றிய பழைய வீடியோக்கள் நிறைய டிரெண்டாக தொடங்கி உள்ளன. அதில் ஒன்று தான் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் சொன்ன கிசுகிசு. அந்த வீடியோவில், தான் நடித்த மரியான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பற்றி கிசுகிசு இடம்பெற்று இருந்ததை கவனித்தீர்களா என டிடி-யிடம் கேட்க, அவரோ அப்படியா அது எனக்கு தெரியாதே என்ன என கேட்கிறார்.

sivakarthikeyan

அதற்கு தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகர், பூ நடிகையுடன் காதலா என தான் மரியான் படத்தில் பேசியது சிவகார்த்திகேயனை பற்றி தான் என தனுஷ் கூற, யார் அந்த பூ நடிகை என டிடி ஆச்சர்யத்துடன் கேட்கிறார். தனுஷ் இந்த கிசு கிசுவை சொன்ன போது சிவகார்த்திகேயனும் அருகில் தான் அமர்ந்திருந்தார். தனுஷ் அந்த தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தான் என கூறினாலும், பூ நடிகை யார் என்பதை அவர் சொல்லவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அந்த பூ நடிகை பார்வதி என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மருத்துவ முத்தத்தையே மிஞ்சிடுவாங்க போல... பிக்பாஸ் வீட்டில் கிஸ் அடித்துகொண்ட காதல் ஜோடி - வைரலாகும் வீடியோ

click me!