சுதாரித்துக் கொண்ட இலங்கை – காயம் காரணமாக நாடு திரும்பிய தோனியின் செல்லப்பிள்ளை பதிரனா!

First Published May 5, 2024, 7:07 PM IST

தசைப்பிடிப்பு காரணமாக சிஎஸ்கேயின் நம்பிக்கை நட்சத்திரமான தோனியின் செல்லப்பிள்ளை மதீஷா பதிரனா இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Matheesha Pathirana Return to Sri Lanka

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மதீஷா பதிரனா. தோனியின் செல்லப்பிள்ளையாகவும் இருக்கிறார். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் வந்து விக்கெட்டுகள் எடுத்துக் கொடுப்பதில் வித்தகர். ஆதலால், பெரியளவில் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அவரை பாதுகாத்து வந்தது.

Matheesha Pathirana IPL 2024

இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய பதிரனா, 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தேவைப்படும் போது இந்த சீசனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

Matheesha Pathirana

சென்னையில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பதிரனா களமிறங்கவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கான விசா எடுக்க இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.

Pathirana

நேற்று தான் மீண்டும் இந்தியா வந்திருந்தார். தீக்‌ஷனா மற்றும் பதிரனா இருவரும் தரம்சாலா வந்திருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

Matheesha Pathirana Return to SriLanka

தசைப்பிடிப்பு காரணமாக பதிரனா இலங்கைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய சென்னை அணியின் சார்பில் வாழ்த்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pathirana Hamstring Injury

இனி வரும் போட்டிகளில் பதிரனா இடம் பெற வாய்ப்பில்லை. ஏற்கனவே தீபக் சாஹரும் காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 49ஆவது லீக் போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய நிலையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Matheesha Pathirana

தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வரும் 53ஆவது லீக் போட்டியில் மிட்செல் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே இருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும், இம்பேக்ட் பிளேயராக சிமர்ஜீத் சிங் இடம் பெற்றுள்ளார். அவர், 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

click me!