அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் புதன்.. இனி இந்த ராசிக்கார்களுக்கு பணமழை தான்..

First Published Apr 17, 2024, 4:15 PM IST

புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும். அவை எந்தெந்த ராசி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சிலருக்கு இந்த பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும். அவை எந்தெந்த ராசி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
 

மிதுனம் :

இந்த புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை தரப்போகிறது. குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இருக்கும். உயரதிகாரிகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை கொடுக்கும்.
 

கன்னி : 
இந்த புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகிறது. திடீர் பண வரவு கிடைக்கும். தடைபட்ட திருமணங்கள் நடந்தேறும். சொத்து தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் விலகும். எனினும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. 
 

தனுசு :
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கரமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை முழு ஆதரவு கொடுப்பார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பண வரவு தங்கு தடையின்றி இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

click me!