Archana Love: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் லவ்வர் இந்த சீரியல் ஹீரோவா? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

First Published Apr 11, 2024, 11:18 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனாவின் காதலர் பற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

vj archana

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. வழக்கம்போல் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக இது அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான டிராபி உடன் ரூ.50 லட்சத்துக்கான காசோலை, ஒரு கார் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது வழக்கம்.

BiggBoss Title Winner Archana

அந்த வகையில் மாயா, பூர்ணிமா ஆகியோர் கோலிவுட், டோலிவுட் என ஹீரோயின்களாக கலக்கி வருகின்றனர். மறுபுறம் விஷ்ணு விஜய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் டைட்டில் ஜெயித்த அர்ச்சனா மட்டும் தனது அடுத்தக்கட்ட நகர்வு பற்றி எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் உள்ளார். இதனிடையே அவரின் காதலர் பற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... CWC 5 contestants : குக் வித் கோமாளி 5 : இவர்கள் தான் 8 போட்டியாளர்களா? அட இவங்களுமா இருக்காங்க..

Archana, Arun Prasath

அதன்படி நடிகை அர்ச்சனாவும், பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் உலா வந்தாலும், அதுபற்றி இருவருமே வாய்திறக்காமல் இருந்து வந்தனர். இதனிடையே நடிகர் அருண் பிரசாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் போட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தற்போது இதில் தான் பிசியாக இருக்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

Arun prasath insta story

ஆனால் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்பதை அருண் பிரசாத் தெரிவிக்கவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அது அர்ச்சனா தான் என உறுதிபட கூறி வருகின்றனர். ஏனெனில் அண்மையில் அர்ச்சனாவும் ஏற்காடு சென்றிருந்தார். அருண் பிரசாத்தும் தற்போது அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளதால், அங்கு இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவதாக கூறி வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின்னர் அருண் பிரசாத் எந்த சீரியலில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... திருமணமான பின்னர் நடிகைகளுடன் ரகசிய உறவு... கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான சினிமா பிரபலங்கள் - ஒரு பார்வை

click me!