Dark Elbows : உங்கள் முழங்கை அசிங்கமா கருப்பா இருக்கா..? இதோ அதை போக்க சில டிப்ஸ்!

First Published May 2, 2024, 2:51 PM IST

எந்த வித செலவும் இல்லாமல் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் கருப்பு முழங்கைகளை சுலபமாக அகற்றலாம். அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்..
 

பெரும்பாலும் நாம் முகத்தின் அழகையும், நிறத்தையும் பராமரிக்க  முடிந்த அளவுக்கு எல்லா முயற்சிகளையும் செய்வது வழக்கம்.
ஆனால், நம்மில் பலருக்கு முழங்கைகள் கருப்பாக இருக்கும். அதை பற்றிய கவலை இருக்குமே தவிர, பெரும்பாலும் அதற்காக எந்த முயற்சியும் எடுப்பது கிடையாது.

மேலும் இந்த பிரச்சனையால் சிலர் தங்களுக்கு பிடித்த ஆடைகளை கூட அணிய முடியாமல் தவிக்கின்றனர். காரணம் முழங்கையின் கருமை, தங்கள் அழகைக் கெடுத்துவிட்டதாக உணர்கிறார்கள். எனவே, இதை சரி செய்ய சிலர் பார்லர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆனால் பல சமயங்களில் அதனால் எந்த பயனும் இல்லை, பணம் செலவானதுதான் மிச்சம். அத்தகைய சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் கருப்பு முழங்கைகளை சுலபமாக அகற்றலாம். அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்...

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை பொலிவாக்க பெரிதும் உதவும். இப்போது உங்கள் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றை முழங்கையில் தடவி ஓரிரு நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் உப்பு: முழங்கையில் உள்ள கருமையைப் போக்க தயிர் சிறந்த வழியாகும். இதற்கு ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் உப்பு கலந்து அதை உங்கள் கருமையான முழங்கைகளில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கருமையை நீக்கும்.

இதையும் படிங்க: அச்சோ! முழங்கைகள் கருப்பா இருக்கேனு கவலைப்படுறீங்களா? வெள்ளையாக மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!!

கற்றாழை ஜெல்: முழங்கை கருமையைப் போக்க கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அதை முழங்கையில் தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கும். கற்றாழை ஜெல் சருமத்திற்கு புத்துணர்ச்சியாக்கும் மற்றும் பளபளப்பாக்கும்.

இதையும் படிங்க: வறண்ட சருமம் உள்ளவரா..? மஞ்சளை நேரடியாக முகத்தில் யூஸ் பண்ணாதீங்க.. இந்தப் பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை!

கடலை மாவு மற்றும் பால்: கடலை மாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி அதை கருமையான முழங்கையில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நீங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!