Anitha Vijayakumar : கோலிவுட் பிரபலங்களுடன் ஹோலி கொண்டாட்டம்... அனிதா விஜயகுமாரின் கலர்புல் கிளிக்ஸ் இதோ

First Published Apr 1, 2024, 10:00 AM IST

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் கோலிவுட் பிரபலங்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கிறார்.

நடிகர் விஜய்குமாரின் மகளான அனிதா விஜயகுமார், சினிமா பக்கம் தலைகாட்டாவிட்டாலும் இன்ஸ்டாவில் பேமஸ் ஆக இருக்கிறார். சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த அனிதா விஜயகுமார், அதைத் தொடர்ந்து தற்போது தனது தோழிகளுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவர் ஏற்பாடு செய்த ஹோலி கொண்டாட்டத்தில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

அனிதா விஜயகுமாரின் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, அங்கு எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹோலி என்றாலே வண்ணங்களின் திருவிழா என்பதால், ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு அன்பை பறிமாறிக்கொண்டனர். அப்படி நடிகை சுஜா வருணி இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி மலர் உடன் எடுத்துக்கொண்ட ஹோலி கிளிக் இது.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : கிளாமரில் தெறிக்கவிட்ட தமன்னா & ராஷி கண்ணா... அரண்மனை நாயகிகளின் அடிபொலி கவர்ச்சி போட்டோஸ் இதோ

கடற்கரையோரம் ஜாலியாக அனிதா விஜயகுமாருடன் ஹோலி கொண்டாடிய சுஜா வருணி, அப்போது அனிதா தனக்கு முத்தமிட்டு அன்பை பறிமாறிக்கொண்ட அழகிய புகைப்படம் இது.

அனிதா விஜயகுமாரின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆட்டம் பாட்டத்துக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் அதில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா ஹாரிஸ் உடன் நடிகை சுஜா வருணி எடுத்த கேண்டிட் கிளிக் இது.

அனிதா விஜயகுமார் ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டத்தில் இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி மலரும் கலந்துகொண்டார். அப்போது அனிதாவும், மலரும் கடலோரம் எடுத்த பியூட்டிபுல் போட்டோ இது.

இதையும் படியுங்கள்... Daniel Balaji : 49 வயதாகியும் டேனியல் பாலாஜி திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?

click me!