65 சமையல் கலைஞர்கள் 2,500 வகை உணவுகள்.. அம்பானி வீட்டு திருமணத்க்தின் மெனு இதுதானாம்..

First Published Feb 28, 2024, 10:43 AM IST

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்வுக்கான மெனு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி,  பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் 1 முதல் 3 வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பில் கேட்ஸ், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் கொண்ட சிறப்புக் குழு இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் இந்தோரி உணவில் சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளதாம்.இந்த விழாவில் ஆசிய உணவுகளைத் தவிர, தாய்லாந்த், மெக்சிகன் மற்றும் ஜப்பானியர்களுக்கான பார்சி உணவுகளும் இந்த உணவு வகைகளில் அடங்கும்.

மூன்று நாட்களில், மொத்தம் 2,500 உணவுகள் மெனுவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக காலை உணவில் 75 க்கும் மேற்பட்ட விருப்பங்களும், மதிய உணவில் 225 க்கும் மேற்பட்ட வகையான உணவுகளும், இரவு உணவில் 275 வகையான உணவுகளும், நள்ளிரவு உணவில் 85 வகையான உணவுகளும் சேர்க்கப்படும்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நள்ளிரவு உணவு வழங்கப்படு உள்ளதாகவும்,. விருந்தினர்களுக்கு சைவ உணவு வகைகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு வேறு நிகழ்ச்சிகளில் இடம்பெறாத வகையில் உணவு வகைகள் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 19 அன்று மும்பையில் நடந்த கோல் தான விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சாயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!