கொசுவலை போன்ற சேலையை... காற்றில் பறக்கவிட்டு கண்ணை பறிக்கும் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்! அல்டிமேட் போட்டோஸ்!

First Published Mar 18, 2024, 8:46 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பர்ஃபில் நிற சேலையில்... பேரழகியாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

ஒரு சில நடிகைகள், எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். ஆனால் இன்னும் சிலர்... சப்போடிங் ரோலில் நடித்து, பின்னரே... மெல்ல மெல்ல தங்களுடைய திறமையை நிரூபித்து கதாநாயகியாக மாறுகிறார்கள்.

அப்படி ஆரம்பத்தில் இருந்தே... மிகவும் கஷ்டப்பட்டு பட வாய்ப்புகளை கைப்பற்றியவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தளபதி வருகையால் ஸ்தம்பித்து போன கேரளா..! ஏர்போட்டில் வீறுநடை போட்டு வந்த விஜய்யின் வீடியோ வைரல்!

ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த போது... கவனிக்கப்படாத நடிகையாக இருந்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது... 2015 ஆம் ஆண்டு, வெளியான "காக்கா முட்டை" திரைப்படம்.

இப்படத்தின்  வெற்றிக்கு பின்னர், அடுத்தடுத்து விக்ரம், விஜய் சேதுபதி, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம்,போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார்.
 

குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் இவர் நடித்த 'கனா' திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. ஆனால் இதை தொடர்ந்து வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிபெற தவறிவிட்டன.

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், மற்றொருபுறம் போட்டோ ஷூட் எடுப்பதிலும் ஆர்வம் காட்டிவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, அழகு புதுமையாய் பர்ஃபில் நிற சேலையில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!