நியூ ஹேர் ஸ்டைல்.. அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே மாறிய ஆராத்தியா! அழகில் அசரவைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Mar 5, 2024, 9:11 PM IST

அம்பானி வீட்டு, விசேஷத்தில் தன்னுடைய அப்பா அபிஷேக் பச்சன் மற்றும் அம்மா ஐஸ்வர்யா ராய்யுடன் கலந்து கொண்ட, ஆராத்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் 1ஆம் தேதி துவங்கி மார்ச் 3-ஆம் தேதி வரை நடந்தது.

இதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  அமீர் கான், சல்மான் கான்,  ஷாருக்கான், அக்ஷய் குமார், சைப் அலிகான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜான்வி கபூர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் தென்னிந்தியாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டார், டோலிவுட் மெகா ஸ்டார் ராம் சரண் தன்னுடைய மனைவி உபாஸனாவுடன் கலந்து கொண்டார். இவர்களை தவிர ஏராளமான விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Genelia Photos: உங்களுக்கு வயசே ஆகாதா? இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும்.. 20 வயது யங் லுக்கில் ஜெனிலியா!

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்யும், தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்தியாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐஸ்வர்யா ராய்யின் மகள் மீடியா கண்களில் பட்ட நிலையில் இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு இவரை பார்க்கும் போது, மிகவும் சிறிய பெண்ணாக பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் காணப்பட்ட ஆராத்யா, தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டுள்ளார். அதே போல் அம்மா ஐஸ்வர்யா ராய் உயரத்திற்கு நிகராக வளர்ந்து, சார்மிங் லுக்கில் காணப்படுகிறார். கிட்ட தட்ட இவரை பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ராய்யை பார்ப்பது போல் இருப்பதாக, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Aishwarya Rajinikanth: பிரைவேட் ஜெட்டில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த் குடும்பம்! ஐஸ்வர்யா பகிர்ந்த போட்டோஸ்!

click me!