Aishwarya Lekshmi: 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியா இது? டீப் நெக் கவர்ச்சியில்... அதிரி புரிதி ஹாட் போட்டோஸ்

First Published Mar 15, 2024, 2:41 PM IST

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி டீப் நெக் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது அதிகம் பாக்கப்பட்டு வருகிறது.
 

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. MBBS படித்து முடித்து விட்டு, சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக, திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். 2017-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த Njandukalude Nattil Oridavela படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து, மாயநதி, வர்தன் போன்ற படங்களில் நடித்தார். அடுத்தடுத்து மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் 2019 ஆம் ஆண்டு... இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா, அடுத்ததாக தனுஷுடன் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார். ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தாலும், இப்படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை. 

இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டும் இன்றி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டும் இன்றி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது டீப் நெக் கவர்ச்சியா... மாடர்ன் உடையில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!