ஆத்தி நீங்களுமா.? கவர்ச்சி கோதாவில் இறங்கிய அதிதி ஷங்கர்! குட்டை கவுனில் அடிக்கிற லூட்டியை நீங்களே பாருங்கள்!

First Published Mar 16, 2024, 1:30 PM IST

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்... குட்டை கவுன் அணிந்து கவர்ச்சியில் ஓவர் அலப்பறை செய்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில், பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் MBBS படித்து முடித்த கையேடு, அதிரடியாக திரையுலகில் அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பொதுவாக இயக்குனர் ஷங்கர், தன்னுடைய குடும்பத்தினரை கேமரா கண்ணில் படாமல் பார்த்து கொண்ட நிலையில், அதிதியின் இந்த முடிவு பலரையும் பிரமிக்க வைத்தது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்த, 'விருமன்' படத்தில் நாயகியாக நடித்த அதிதி முதல் படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும், தன்னுடைய அழகாலும்... நடனத்தாலும் கவர்ந்தார்.

இதை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் வெளியானதை தொடர்ந்து, விரைவில் அதிதிக்கு தெலுங்கு பட வாய்ப்புகளும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாகி வரும் அதிதி, விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் வழக்கம்.

அந்த வகையில் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல்... வெளிநாட்டுக்கு சென்ற போது அதிதி எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. செயற்கையான நீர் வீழ்ச்சி அருகே முட்டி தெரியும் குட்டை உடையில் போஸ் கொடுத்துள்ளார். அதே போல் மிகவும் சந்தோசமாக பல்வேறு இடங்களில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தான் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, மாடர்ன் உடையில் போஸ் கொடுத்தாலும்... முட்டி தெரியும் அளவுக்கு கவர்ச்சி காட்டுவதை தவிர்க்கும் அதிதி...  குட்டை கவுனில் கொடுத்த போஸை பார்த்து விட்டு, ஆத்தி நீங்களுமா? என நெட்டிசன்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர்.

click me!