டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பேரழகி.. சௌந்தர்யாவின் க்யூட் போட்டோ..

First Published Apr 26, 2024, 10:29 PM IST

நடிகை சௌந்தர்யாவின் க்யூட் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் தற்போது மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார்.

கர்நாடகாவை சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்ய தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. 

விக்ரம் மகன் துருவ் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் சௌந்த்ர்யா துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பின்னர் ஓவியா நடிப்பில் வெளியான 90 எம்.எல். படத்தில் நடித்தார். இதில் கிறிஸ் என்ற ஓரின சேர்க்கை பெண்ணாக நடித்திருப்பார் சௌந்தர்யா.

தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் டும் டும் பாடலில் மணப்பெண்ணாக நடித்தார். திரௌபதி, காலங்களில் அவள் வசந்தம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் சிறு கதாப்பாத்திரங்கள் கிடைத்தாலும் அதில் நடித்து தனது நடிப்பு திற்மையை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியிலும் சௌந்த்ர்யா பங்கேற்றார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சௌந்தர்யா அவ்வப்போது தனது போட்டோஷுட் புகைப்படைங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது புடவையில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நீ தான் என் தேவதை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

click me!