மோசமடைந்த உடல்நிலை... ஒரு வாரமாக ஐசியூவில் சிகிச்சை - நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு?

First Published Jan 11, 2024, 8:46 AM IST

நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு வாரம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.

ravindar Chandrasekaran

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். அந்நிறுவனம் மூலம் கவினின் நட்புனா என்னன்னு தெரியுமா, ஷாந்தனு பாக்கியராஜ் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்து இருந்தார். இவர் தயாரிப்பாளராக மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார். தனியார் யூடியூப் சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினசரி விமர்சனம் செய்து வருகிறார் ரவீந்தர்.

Mahalakshmi, Ravindar Chandrasekaran

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ரவீந்தருக்கு கடந்த 2022-ம் ஆண்டு 2-ம் திருமணம் நடைபெற்றது. அவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சமயத்தில் இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு நடிகை மகாலட்சுமி காசுக்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்... நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனை எதிர்த்து போட்டி; நடிகர் மன்சூர் அலிகான் திடீர் அறிவிப்பு

Mahalakshmi Husband Ravindar

திருமணமாகி ஓராண்டில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சிறைக்கு சென்றார். படம் எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து கைதான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய தொடங்கினார். தினசரி அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

Ravindar Chandrasekaran Health

இந்த நிலையில், அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துகொள்ள வந்தபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், மூக்கில் ஆக்ஸிஜன் டியூப் உடன் அவர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான், தனக்கு நுரையீரலில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக ஒரு வாரம் ஐசியூவில் சிகிச்சை பெற்ற தகவலை வெளியிட்டார் ரவீந்தர். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் உடல்நலம் சரியாகும் வரை இப்படி கஷ்டப்பட்டு பிக்பாஸ் விமர்சனம் செய்ய வேண்டாம் என அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குட்டிச் சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு... யங் லுக்கில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி வைரல்

click me!