Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

First Published Mar 30, 2024, 11:18 AM IST

பிளிப்கார்ட்டின் இணையதளம், ஆப் மூலம் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் ஆக்சஸரீஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமின்றி புதிய பைக்கை குறைந்த விலையில் வாங்கலாம்.

Mileage Bike

பிளிப்கார்ட் மூலம் 60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான, அதே நேரத்தில் நல்ல மைலேஜ் தரும் பைக்கை வாங்கலாம். ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் ஆனது தினசரி பயணங்களுக்கு இந்த பைக் சிறந்த தேர்வாகும். இதில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், பின்புறத்தில் 130 மிமீ பிரேக்குகள் உள்ளன.

Hero HF Deluxe

பைக்கின் நீண்ட, வசதியான இருக்கை நீண்ட தூரம் ஓட்டுவதற்கும் நன்றாக வேலை செய்கிறது. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் 97.22 சிசி 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் OHC இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8.02 PS ஆற்றலையும் 8.05 Nm முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது.

Best Mileage Bikes

இதில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இது கிக் ஸ்டார்ட் சிஸ்டத்துடன் வருகிறது. பைக்கின் முன்புறம் டிரம் பிரேக் உள்ளது. டியூப் டயர்களுடன் வருகிறது. இதன் எரிபொருள் டேங்க் 9.6 லிட்டர்.  இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கி.மீ. மைலேஜ் பற்றி பேசினால், ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும்.

Hero Bikes

நீங்கள் பிளிப்கார்ட் இலிருந்து ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கை வாங்கினால், Citi-brand கிரெடிட் கார்டு, HSBC வங்கி கிரெடிட் கார்டு மூலம் EMI பரிவர்த்தனையில் 10 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம்.  நீங்கள் கேஷ்பேக் அல்லது கூப்பன்களைப் பெறலாம். அதை நீங்கள் பின்னர் ரிடீம் செய்யலாம். இந்த பைக் ரூ.59,698 எக்ஸ்ஷோரூம் விலையில் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.

New Bikes

இந்த விலையைத் தவிர காப்பீட்டுத் தொகை, ஆர்டிஓ கட்டணம், மதிப்புக் கூட்டப்பட்ட சேவை, கையாளுதல் கட்டணம், கூடுதல் பொருட்கள் ஆகியவற்றுக்குத் தனியாகச் செலுத்த வேண்டும். இந்தப் பணம் டீலரிடம் நேரடியாகச் செலுத்தப்பட வேண்டும்.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!