Zee Introduce 2 New Channels : ஆடி மாதம் பிறந்ததைத் தொடர்ந்து ஜீ புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. ‘Z’ Whats Next நிகழ்வில் புதிய சேனல்கள் மட்டுமின்றி இனி வரும் காலங்களில் புதுமைகளையும் அறிமுகப்படுத்த உள்ளது.
Zee Introduce 2 New Channels :தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில் மக்களும் அதற்கேற்ப வாழ தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். அதற்கேற்பவும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் மக்கள் விரும்பும் புதுமைகளை கொடுத்து வருகின்றன. அப்படித்தான் இப்போது ஜீ தனது புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. அதன்படி “Yours Truly, Z” மற்றும் அதன் எதிர்காலப் பயணத்தை வலியுறுத்தும் வகையில், ‘Z’ Whats Next எனும் தொழில்துறையினரை மையமாகக் கொண்ட சிறப்பு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
26
ஜீ வாட்ஸ் நெக்ஸ்ட்
இந்த நிகழ்வின் போது ஜீ உருவாக்கும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், மாறிவரும் பார்வையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப பன்முகத்துடன் கூடிய பொழுதுபோக்குகள் குறித்து முக்கிய அம்சங்கள் பகிரப்பட்டன. தொலைக்காட்சி, ஒடிடி, மற்றும் சமூக ஊடகங்களில் ஒருங்கிணைந்த கதைகள் மற்றும் வடிவங்களை உருவாக்கும் திறன் ஜீக்கு இருப்பதை இந்த நிகழ்வு வலியுறுத்தியது.
36
ஜீ புதிய சேனல்கள்
உலகில் எந்த மூலையிலும் பார்வையாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எந்த தளத்திலும் கதைகளை தொடர்ந்து அனுப்பக்கூடிய சூழல் உருவாக்கப்படுவதை இந்த புதிய முயற்சி காட்டுகிறது. அதன்படி இப்போது 2 புதிய சேனல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி கர்நாடக மாநில இளைஞர்களை கவரும் வகையில் அவர்களுக்காக ஜீ பவர் என்ற புதிய சேனலும், இந்தியா முழுவதும் உள்ள வங்க மொழி பேசும் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜீ பங்களா சோனார் என்ற புதிய சேனலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
46
ஜீ பவர், ஜீ பங்களா சோனார்
ஜீ பவர் சேனலானது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. துணிச்சலான நகர்ப்புற கதைகள், அபிலாசை நிரம்பிய நிகழ்ச்சிகள் மற்றும் நவீன பார்வையுடனான உள்ளடக்கம் இதில் இடம்பெறும். கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களையும் அடையும் வகையில் பன்முக ஊடக பிரசாரத்துடன் இது தொடங்கப்படுகிறது. தொடக்க கட்டத்தில் ஐந்து புனைகதை தொடர்கள், ஒரு நிஜ நிகழ்ச்சி மற்றும் தினசரி திரைப்படங்களும், சில உலக தொலைக்காட்சி முன்னோட்டங்களும் இடம்பெறவுள்ளன.
56
ஜீ பங்களா சோனார்
இதே போன்று ஜீ பங்கலா சோனார் என்ற புதிய சேனலும் அறிமுகம் செய்யப்பட்டது. இது புனை கதைகள், நிஜ நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் புதிய வடிவங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பு டிவி சேனல். இந்த சேனலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இது ஆகஸ்ட் 2025ல் அதிகாரபூர்வமாக ஒளிபரப்பாகும்.
66
11 மொழிகளில் 50 சேனல்கள்
நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து ஜீ தற்போது 11 மொழிகளில் 50 சேனல்களை நடத்தி கதைகள், நிகழ்ச்சிகள், அன்றாட நிகழ்வுகள் மூலமாக ரசிகர்களை கவர்கிறது. இந்த நிகழ்வு, ஜீயின் புதிய யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக மாறியுள்ளது. பார்வையாளர்கள் நாடு முழுவதும் எந்தத் தளத்தில் இருந்தாலும், கதைகள் அவர்களுடன் பயணிக்க கூடியதாக ஜீ உருவாக்கி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.