பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற 'கிங்' படப்பிடிப்பில் காயமடைந்தார். ஒரு சண்டைக் காட்சியின் போது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. காயத்தின் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஷாருக்கானின் குழுவினரும் இந்த விபத்து பற்றி இதுவரை எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.
24
ஷாருக்கானுக்கு காயம்
ஷாருக்கானுக்கு ஏற்பட்டது பெரிய காயம் இல்லை, சிறிய காயம்தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கான் குணமடைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம் என்பதால் 'கிங்' படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாம். அவரது உடல்நிலை சீராக உள்ளதால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளன்ர். நடிகர் ஷாருக்கான் நடிக்கும் கிங், பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. அப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.
34
கிங் படப்பிடிப்பு நிறுத்தம்
சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படத்தில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். கிங் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்கு முன்னர் 2023-ம் ஆண்டு தொடர்ச்சியாக மூன்று படங்களை வெளியிட்டார் ஷாருக். அந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதில் இரண்டு படங்கள் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளின.
ஷாருக்கான் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் ஹிட் கொடுத்த படங்கள் வேறெதுவுமில்லை.... பதான், ஜவான் மற்றும் டங்கி தான் அந்த படங்கள். இதில் பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் நடிப்பில் வெளிந்த ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அவர் நடித்த டங்கி திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.