Published : May 20, 2025, 04:10 PM ISTUpdated : May 20, 2025, 04:13 PM IST
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த ‘சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்துள்ள பரிசு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Saregamapa title winner divinesh gifted tata ace to his father
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் ‘சரிகமப’. இந்த நிகழ்ச்சியின் லிட்டில் சாம்பியன்ஸின் சீசன் 4 சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் சிறுவன் திவினேஷ் டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை யோக ஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹேமித்ரா ஆகியோரும் பிடித்திருந்தனர். வெற்றி பெற்ற திவினேஷ்க்கு ரூ.10 லட்சம் பரிசும், ‘மெல்லிசை இளவரசன்’ என்கிற பட்டமும் வழங்கப்பட்டது.
25
ஏழ்மையான குடும்பப் பின்னணி
மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த திவினேஷ், சிறுவனாக இருந்த போதிலும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பழைய பாடல்களை பாடி பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதனால் இவர் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு திவினேஷ் தனது தந்தை குறித்து நிகழ்ச்சியில் பேசி இருந்தார். தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதால் தந்தையை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக அவர் வருத்தத்துடன் பேசி இருந்தார்.
35
தந்தைக்காக உருகிய திவினேஷ்
மேலும் தனது தந்தைக்கு ஒரு Tata Ace வாகனம் வாங்கி கொடுப்பதே தன்னுடைய கனவு என்றும், இந்த வண்டி இருந்தால் தன்னுடைய தந்தை அதன் மூலம் பால் டெலிவரி செய்வார் என்றும் திவினேஷ் கூறியிருந்தார். இதைக் கேட்ட நடுவர் ஸ்ரீநிவாஸ் வண்டி வாங்க தாம் உதவுவதாக கூறினார். பின்னர் நடுவர்கள் மட்டுமின்றி பலரும் தாமாக முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்தனர். தற்போது திவினேஷ் ஆசையின்படி அவரது தந்தைக்கு புதிய வாகனத்தை சரிகமப குழுவினரும், திவினேஷின் ரசிகர்களும் இணைந்து வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை பாடகர் ஸ்ரீநிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திவினேஷும் அவரது தந்தையும் புதிய வாகனத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஸ்ரீநிவாஸ், “இந்த இளம் வயதிலேயே திவினேஷ் தனது தந்தைக்காக சாதித்துள்ளான். இது எதுவும் திட்டமிடமிடவில்லை. தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக வாகனம் தான் வாங்குவது தான் தன்னுடைய கனவு என்று திவினேஷ் சொன்ன பொழுது, அதற்காக நான் சிறு பங்களிப்பை செய்தேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு உலகம் முழுவதிலும் இருந்து பலர் தங்களுடைய பங்களிப்பை செய்ய விரும்பினர். அது இப்போது நடந்துள்ளது.
55
பாடகர் ஸ்ரீநிவாஸ் உருக்கமான பதிவு
இறுதிப் போட்டி முடிந்த பின்னர் திவினேஷுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அது திவினேஷுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹேமித்ரா அக்கா தானே ஜெயித்தார்கள். ஏன் எல்லோரும் என் கூட போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என அப்பாவியாகக் கேட்டார். பொதுவாக நிகழ்ச்சிகளில் ரன்னர் பெயரை முதலில் சொல்லிவிட்டு இறுதியாகத் தான் வின்னர் பெயரை சொல்வோம். அதுபோல ரன்னர் ஹேமித்ராவின் பெயரை முதலில் கூறியதால், ஹேமித்ரா தான் ஜெயித்ததாக திவினேஷ் நினைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட அப்பாவியான குழந்தை தான் திவினேஷ். அதனால்தான் அவருடைய பாடலில் வார்த்தைகளை காட்டிலும் உண்மைகள் இருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.