Atlee Kumar : கவுரவ டாக்டர் பட்டம் பெறுகிறார் இயக்குனர் அட்லீ!

Published : May 20, 2025, 03:50 PM IST

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா அளவில் கலக்கி வரும் இயக்குனர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

PREV
14
Honorary Doctorate For Atlee

சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதனைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் அட்லீ இப்பட்டத்தைப் பெற்றுக்கொள்வார். இந்தச் செய்தியால் அட்லீ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

24
அட்லீயின் அசுர வளர்ச்சி

அட்லீயின் நீண்ட திரைப்பயணத்தில் அவர் பெற்ற வெற்றிகளுக்கான அங்கீகாரமாக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. கோலிவுட்டில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன்பின்னர் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். ஷாருக்கானுடன் இணைந்து இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

34
அட்லீயின் அடுத்த படம்

இந்த வெற்றிக்குப் பிறகு, அட்லீயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது டோலிவுட் நட்சத்திர நடிகர் அல்லு அர்ஜுனுடன் அவர் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இப்படம் 700 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

44
அட்லீக்கு டாக்டர் பட்டம்

இந்த கவுரவ டாக்டர் பட்டம் அட்லீயின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தொழில்நுட்பத் திறமை மற்றும் ரசிகர்களைக் கவரும் வணிக அம்சங்களுடன் கதைகளை படமாக்கும் அட்லீக்கு இது தொழில்நுட்பத் துறையிலிருந்து கிடைத்த அங்கீகாரமாகும். ஜூன் 14 அன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அட்லீ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ள உள்ளார். இதற்கு முன்னர் பல முன்னணி இயக்குனர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories