Published : Jan 17, 2025, 03:35 PM ISTUpdated : Jan 17, 2025, 06:17 PM IST
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு, ஜூலை மாதம் துவங்கப்பட்ட முக்கிய சீரியல் 6 மாதத்திலேயே முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தொலைக்காட்சிகளில், முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடினாலும், சீரியல்களை பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சமீப காலமாக இளம் ரசிகர்களும், அதிக அளவில் சீரியல் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே தான், சன் டிவி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களை வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
25
Jai Aakash Serial
வெள்ளித்திரை ஹீரோயின்கள் கூட, திரைப்பட வாய்ப்பு கிடைக்காத நிலையில்... அதிரடியாக சின்னத்திரையில் நடிக்க துவங்கி விடுகிறார்கள். அதே போல் சீரியலில் நடிக்கும் ஹீரோயின்களும் சின்னத்திரை மூலம், வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தநிலையில் தான், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர் முடிவுக்கு வர உள்ள தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீரியல் தான் 'நெஞ்சத்தை கிள்ளாதே'. இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக விஜய் டிவி கிழக்கு வாசல் தொடரில் நாயகியாக நடித்த, ரேஷ்மா முரளிதரன் நடித்து வந்தார்.
45
Nenjathai Killadhe suddenly Stopped
ஹிந்தியில் ஒளிபரப்பான Bade Achhe Lagte Hain என்கிற சீரியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு TRP ரேட்டிங் கிடைக்காததாலும், இன்னும் ஒரு சில காரணங்களுக்காக ஜீ தமிழ் முடிவுக்கு கொண்டுவர உள்ளது. தொடங்கிய 6 மாதத்தில், இந்த சீரியல் முடிவடைய உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
TRP-யில் ரேட்டிங்கை மிஸ் செய்தலும், நடிகர் ஜெய் ஆகாஷுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரையில் உள்ளது. அவர்கள் மிகவும் வருத்தத்துடன் ஏன் இந்த திடீர் முடிவு என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.