மாதம் ரூ.25 லட்சம் வருமானம்.. ஏழை மக்களுக்கு உதவும் யூ டியூபர் ஹர்ஷா சாயின் சொத்து மதிப்பு எவ்வளவு?

First Published | Jul 31, 2024, 5:20 PM IST

யூ டியூபில் வீடியோ போட்டு செலிபிரிட்டியாக மாறிய ஹர்ஷா சாயின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

யூ டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதன் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் யூ டியூபில் வீடியோ போட்டு செலிபிரிட்டியாக மாறிய ஹர்ஷா சாய் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயதாகும் ஹர்ஷா சாய் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார். கல்லூரி படிப்பை முடித்த உடன் யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கிய ஹர்ஷா அதில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பதிவிட்டார். இதன் மூலம் அவருக்கு சப்ஸ்கிரைபர்ஸ் வர தொடங்கினர்.


பின்னர் வெறும் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய அவர், அதனையும் வீடியோவாகவும் பதிவிட்டார். இந்த வீடியோவுக்கு நல்ல ரீச் கிடைத்த நிலையில், பேய் வீட்டில் தங்குவது உள்ளிட்ட பல வீடியோக்களை தனது சேனலில் வெளியிட்டா ஹர்ஷா சாய். இதையடுத்து அவருக்கு அதிகளவிலான சப்ஸ்கிரைபர்ஸ் வரத் தொடங்கினர். 

பிரபலமான யூ டியூப் செலிபிரிட்டியாக மாறிய அவர், யூ டியூப் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யத் தொடங்கினார். ஏழை சிறுவனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுப்பது, 1000 பேருக்கு டேங்க ஃபுல்லாக பெட்ரோல் போட்டு கொடுத்தது என பல உதவிகளை செய்து வந்தார். 

1 லட்சம் ஏழைகளுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்து பிரபலமானார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள அனைத்து சிறந்த ஹோட்டல்களிலும் ஏழை மக்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இப்படி மக்கள் மத்தியில் பிரபலமான ஹர்ஷா சாய் 3 யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இந்த 3 சேனல்களிலும் சுமார் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். இந்த நிலையில் ஹர்ஷா சாயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.20 முதல் 22 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் அவர் ஒரு மாதத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் சம்பாதிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

Latest Videos

click me!