அட.. இந்த தமிழ் ஹீரோவும், இசையமைப்பாளரும் மகேஷ் பாபுவோட Classmates தானா? யார் யார் தெரியுமா?

First Published | Jul 31, 2024, 3:48 PM IST

மகேஷ் பாபு தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை சென்னையில் கழித்தார். அவரின் வகுப்பு தோழர்களும் தற்போது பிரபலங்களாக வலம் வருகின்றனர்.

Mahesh Babu

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவர் தனது 4-வது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமான அவர் பின்னர் ராஜகுமருடு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ஒக்கடு, அத்தடு, போக்கிரி, தூக்குடு, பிசினஸ் மேன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Mahesh Babu

இவற்றில் பல படங்கள் தெலுங்கு சினிமாவின் அதிக வசூல் செய்த படங்களாகவும் அமைந்தன. மகேஷ் பாபுவுக்கென தனி ரசிக பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் அவர் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக ஹிட் படமாகவே அமைந்தது. 


Mahesh Babu

மகேஷ் பாபு தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை சென்னையில் கழித்தார். மகேஷ் 10-ம் வகுப்பு வரை சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியில் படித்தார். ஆனால், இப்பள்ளியில் வேறு சில திரையுலக பிரபலங்கள் அவருடன் படித்துள்ளனர். ஆம். சூர்யா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மகேஷ் பாபுவின் வகுப்பு தோழர்கள் ஆவர். நடிகர் கார்த்தியும் அதே பள்ளியில் தான் படித்துள்ளார். 

Mahesh Babu

நடிகர் சூர்யாவும் இதுகுறித்து ஒருமுறை பேசி உள்ளார். நான், யுவன், மகேஷ் பாபு அனைவரும் செயின்ட்ஸ் பீட்ஸ் பள்ளியில் நண்பர்கள் என்று கூறினார். அப்போது தாங்கள் நண்பர்கள் தான் என்றும், அப்போது நாங்கள் அனைவரும் படங்களில் நடிப்போம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போது அனைவரும் படங்களில் நடித்து, பெரிய ஹீரோக்களாக மாறி உள்ளதாகவும் கூறினார். 

Suriya

மகேஷ் பாபு, யுவன் சங்கர் ராஜா ஆகியோருடன் ஒன்றாகச் சாப்பிடுவதுடன், மதிய உணவு நேரத்தில் வீட்டில் செய்யும் உணவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் சூர்யா கூறினார். தானும் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்து ஒன்றாக வேலை செய்தோம். அதன்பின்னர் மகேஷ் பாபுவும் திரைப்படங்களீல் நடித்தார். எனினும் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்ர். ஆனால் மகேஷ் பாபு தனது அனைத்து படங்களையும் பார்த்து தனது கருத்துக்களை கூறுவதாக சூர்யா தெரிவித்தார்.

Suriya

தற்போது சூர்யா`கங்குவா'' படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பான் இந்தியா திரைப்படம். இந்த படம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!