varisu : ‘வாரிசு’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்

Published : Jun 26, 2022, 11:35 AM IST

varisu : வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்திற்காக இசையமைப்பாளர் தமன் ரீமிக்ஸ் பாடல் ஒன்றை போட்டுள்ளாராம்.

PREV
14
varisu : ‘வாரிசு’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வாரிசு. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிக மந்தனா நடிக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம், சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... Indian 2 : விக்ரம் கூட்டணியை விடாமல் துரத்தும் கமல்... இந்தியன் 2-விலும் இணையும் பிரபல மாஸ் நடிகர்

24

வாரிசு படத்தின் இசைப் பணிகள் சமீபத்தில் தொடங்கி உள்ளது. இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் பாடல் பணிகளின் போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Samantha : 56 வயது நடிகருடன் காதலா...! நடிகை சமந்தாவின் அதிரடி முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

34

அதன்படி, வாரிசு படத்திற்காக இசையமைப்பாளர் தமன் ரீமிக்ஸ் பாடல் ஒன்றை போட்டுள்ளாராம். அதன்படி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்டா பூபதி பாடலைத் தான் தற்போது வாரிசு படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளார்களாம். இப்பாடலுக்கு மணிசர்மா இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... Shakeela : விஜய் கூடலாம் டான்ஸ் ஆடி இருக்கா... ஆனா 23 வயசுலயே இறந்துட்டா - தங்கை மறைவால் கலங்கிய ஷகீலா

44

இதேபோல் கடந்தாண்டு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்திற்காக கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருந்தது. வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்பாடலை அனிருத் ரீமிக்ஸ் செய்திருந்தார். இப்பாடலை போல் ஆல்தோட்டா பூபதி பாடலின் ரீமிக்ஸும் வரவேற்பை பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories