pushpa 2
கடந்த ஆண்டு டிசம்பரில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா: தி ரைஸ் திரைப்படம் வெளியான பிறகு, அதன் தொடர்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பெரிய திரைகளில் திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்க முடியாத நிலையில், இந்த பிளாக்பஸ்டர் ஹாட் திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
pushpa 2
அல்லு அர்ஜுன் தனது நெருங்கிய ஆலோசகர்கள் மற்றும் சக தோழர்களை தமிழ்நாட்டு எல்லை மற்றும் சித்தூருக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதிக்கு மொழி புரிந்து கொள்ள அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் சுகுமார் ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அல்லு அர்ஜுன் இந்த கேரக்டருக்காக வித்தியாசமான தோற்றத்தில் முயற்சி செய்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு... தமிழ்நாட்டு எல்லையில் மொழி கற்றுக்கொள்ளும் அல்லுஅர்ஜூன்..மாஸாக ரெடியாகும் புஷ்பா 2!
pushpa 2
இதன் தொடர்ச்சியாக ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கேரக்டர் கொல்லப்படலாம் என்ற ஊகங்கள் காட்டுத்தீ போல வைரலாக பரவியது. இந்த வதந்திகளுக்கு புஷ்பா தயாரிப்பாளர் ஒய்.ரவி சங்கர் விளக்கம் அளித்துள்ளார். "அதெல்லாம் பொய் தான்," என்று கூறுய அவர்,, "இது எல்லாம் முட்டாள்தனம். இது வரைக்கும் கதையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் கேட்கவில்லை, அது அப்படி இல்லை, இவை அனைத்தும் யூகங்கள். இந்த நேரத்தில், நீங்கள் அந்த படத்தில் எதையும் எழுதுகிறீர்கள், அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இதை மற்ற இணையதளங்கள் மற்றும் டிவி சேனல்களும் கொண்டு செல்கின்றன. ஆனால் இது தவறான செய்தி என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு... சூப்பர்ஸ்டார் பாராட்டிய மாமனிதன்...விரைவில் ஓடிடிக்கு வரும் விஜய் சேதுபதி!
pushpa 2
மேலும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ஃபஹத் பாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்சயா, அனசுயா பரத்வாஜ், அஜய் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு... அஜீத் குமாரின் சமீபத்திய பைக் ரைட் வீடியோ இணையத்தை உலுக்கி வருகிறது!