சினிமாவில் ஏராளமான நடிகர் நடிகைகள் அறிமுகமான வண்ணம் உள்ளனர். அப்படி வரும் அனைவருக்கும் சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சினிமாவில் அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த வகையில் சினிமாவில் தற்போது மச்சக்கார நடிகர் என்றால் அது காமெடி நடிகர் யோகிபாபு தான்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பின்னர் அமீரின் யோகி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. பல்வேறு தடைகளை தாண்டி தனது கடின உழைப்பால் முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. வடிவேலு, சந்தானம் போன்ற நடிகர்கள் ஹீரோவாக நடிக்க கிளம்பிவிட்டதால், தமிழ் சினிமாவில் காமெடியனுக்கு பஞ்சம் ஏற்பட்டது.
தற்போது யோகிபாபு கைவசம் சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, அந்தகன், பிஸ்தா, காவி ஆவி நடுவுல தேவி, ஹரா, பூச்சாண்டி, சலூன், அயலான், காஃபி வித் காதல், வெள்ளை உலகம், தீயோருக்கு அஞ்சேல், டக்கர், சூரப்புலி, தமிழரசன், நானே வருவேன், ஜவான், காசேதான் கடவுளடா, தலை நகரம் 2, வாரிசு, மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள், ஜெயிலர், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களும், இதுதவிர பெயரிடப்படாத சில படங்களும் உள்ளன.