மீண்டும் காதல் தோல்வியா..? யார் மேல இம்புட்டு கோபம்... நடிகை திரிஷா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்

Published : Aug 20, 2022, 07:49 AM ISTUpdated : Aug 20, 2022, 07:51 AM IST

Trisha : இன்ஸ்டாகிராமில் நடிகை திரிஷாவின் கோபமான பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

PREV
16
மீண்டும் காதல் தோல்வியா..? யார் மேல இம்புட்டு கோபம்... நடிகை திரிஷா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை திரிஷா, கடந்த 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த படம் ஜோடி. இப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்து இருந்தார். இதையடுத்து அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

26

இதையடுத்து விக்ரம் ஜோடியாக சாமி, விஜய்க்கு ஜோடியாக கில்லி என வரிசையாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் திரிஷா. அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் திரிஷா தான்.

36

இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இன்றளவும் குறையாத அழகுடன் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் திரிஷா. தற்போது இவர் நடிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... இந்த வருடம் தாயான திரை பிரபலங்கள்...யார் யார் தெரியுமா?

46

இவ்வாறு சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. இருப்பினும் இருமுறை காதல் தோல்வியை சந்தித்து உள்ளார். முதலில் தெலுங்கு நடிகர் ராணா மீது காதல் வயப்பட்ட திரிஷா, சில ஆண்டுகளிலேயே அவரை பிரிவதாக அறிவித்தார். பின்னர் சினிமா தயாரிப்பாளரான வருண் மணியனை காதலித்தார்.

56

இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்ததால் திருமணம் நடக்காமல் போனது. இந்த இரு காதல் தோல்விகளுக்கு பின்னர் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

66

இந்நிலையில், அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், “வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டால் அது மிகவும் நல்லது. குப்பையே தன்னை வெளியே தூக்கி எறிந்து கொள்வது போல் அது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்த கோபமான பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

Read more Photos on
click me!

Recommended Stories