இந்த வருடம் தாயான திரை பிரபலங்கள்...யார் யார் தெரியுமா?

First Published | Aug 19, 2022, 9:45 PM IST

முன்பெல்லாம் பிரபல நடிகைகளாக இருப்பவர்கள் தங்களது திருமணமோ அல்லது கர்ப்ப காலமோ  குறித்து  கூறுவதற்கு தயங்கும் காலம் போய் தற்போது கர்ப்பகால கிளாமர் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருவதே ட்ரண்டாகிவிட்டது. அந்த வகைகள் இந்த வருட தாய்மையடைந்த பிரபலங்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கு காணலாம்.

kajal aggarwal

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். படங்களில் பிசியாக இருந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது காதலனான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் முடித்தார். இவர் கற்பகமாக இருப்பதை இன்ஸ்டா மூலம் அறிவித்த இந்த தம்பதிகள் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆண்மகனை பெற்றெடுத்தனர்.

namita

தமிழ் திரை உலகில் மற்றும் ஒரு பிரபல நடிகையாக இருந்தவர் நமீதா. இவர் மற்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு பிக் பாஸ் தமிழ் ஒன்றில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுதாரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Tap to resize

nakul

பிரபல நடிகரும் பாடகருமானின் நகுல், ஸ்ருதி என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பகாலம் குறித்த வீடியோக்களையும் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

mahath

அதேபோல பிக் பாஸ் பிரபலமான மஹத் ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி பிராட்சி விரைவில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான விஷயத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருந்தார். இவர்கள் 2020 ஜனவரியில்  திருமணம் செய்து கொண்டார்.  முதல் ஆண்டு திருமண விழாவில் பிராட்சியின் கர்ப்பத்தை அறிவித்தார் மகத்.  இவர்களுக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

sridevi ashok

அதேபோல பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி காதலர் தினத்தன்று தனது கர்ப்பம் குறித்த செய்தியை அறிவித்திருந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அசோக் என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

alya manasa

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து இருந்தார். ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலைகள் ராஜா ராணி 2 வில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் மீண்டும் கர்ப்பம் தரித்திருக்கும் செய்தியை அவரது கணவர் சஞ்சீவ் சமூக ஊடங்களில் வெளியிட்டிருந்தார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண்மகன் பிறந்துள்ளான்.

மேலும் செய்திகளுக்கு...வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

jenniferr

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமியை ராதிகாவாக நடித்து வந்த ஜெனிஃபர். திடீரென சீரியலில் இருந்து விலகியதோடு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அறிவித்திருந்தார்.  இவருக்கு அந்த பிள்ளை பிறந்துள்ளது.

farina

மற்றொரு  சீரியல் பிரபலமான பாரதிகண்ணம்மா பாரீனா அசாத் கர்ப்பகால விடுமுறைக்கு பிறகு சமீபத்தில் தான் சீரியலுக்கு திரும்பினார். இவருக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளது. தனது மகனுடன் போட்டோ சூட் நடத்தி கலக்கி இருந்தார் பாரீனா. 

மேலும் செய்திகளுக்கு...ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் லான்ச் லைவ்

chinmayi

பிரபல பாடகி சின்மயீ தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்தார். நடிகர் ராகுல் ரவீந்தர் என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது பெற்றோர்களாகியுள்ளனர்.

Latest Videos

click me!