கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

First Published | Aug 19, 2022, 9:02 PM IST

எதுவும் தனக்கு உதவவில்லை என தெரிவித்த மோகினி, அதனால் தான் மதமாறியதாகவும், அது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

mohini

சூப்பர் ஹிட் படமான ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மோகினி. பெயருக்கு ஏற்றபடி அழகு கொண்ட இவர் தனது 14 வயதிலேயே சினிமா உலகிற்குள் வந்து விட்டார். கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இளையராஜாவின் இளமை கலந்த பாடலால் ஹிட் அடித்தது. 

mohini

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமானவர் மோஹினி. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கதாநாயகியாக நடித்து பிரபலமான மோகினி. முன்னணி நாகியாக இருந்து வந்தார்.

மேலும் செய்திகளுக்கு...வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!


mohini

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் பரத் கிருஷ்ணாவை மணந்து கொண்டார். பின்னர் வெளிநாட்டிலேயே குடியேறினார்கள். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர். இறுதியாக கலெக்டர் திரைப்படத்தில் தான் தோன்றியிருந்தார் மோஹினி.

mohini

முன்னதாக 2006ல் குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டார் நடிகை. பின்னர்  சினிமா துறையில் இருந்து விலகி மெகா சீரியல்களில் தோன்றி வந்தார் மோகினி. இப்போது மோகினி முழு நேர கிறிஸ்தவ போதகராக மாறி, மத பணிகளில் தீவிரமாக இருக்கிறாராம்.

மேலும் செய்திகளுக்கு...ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் லான்ச் லைவ்

mohini

இது குறித்து முன்பு இவர் அளித்த பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டேன். அது தன்னை தற்கொலைக்கு தள்ளியது எதுவும் தனக்கு உதவவில்லை என தெரிவித்த மோகினி, அதனால் தான் மதமாறியதாகவும், அது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது கணவரை விவகாரத்தக்கு செய்த மோஹினி தனது  பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்

Latest Videos

click me!